டிஜிட்டல் லைப்ரரி

பழங்கால தமிழ்ப்பதிவுகள் கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் மற்றும் பானை சில்லுகளில் படைக்கப்பட்டன. தொழிற்நுட்ப புரட்சியின் படைப்பான அச்சு இயந்திரங்களால் பல புத்தகங்களும் காகிதப்படைப்புகளாக வெளியாகின. இதைப்போல் படைக்கப்பட்ட அனைத்தும் காலங்கள் ஓடஓட தற்போது பல அழியும் நிலையில் உள்ளன, இவற்றை பாதுகாத்தாலே வருங்கால சந்ததிகள் அனைத்து படைப்புகளையும் பயன்படுத்த முடியும். இவற்றை தகவல் தெழிற்நுட்பம் வாயிலாக பாதுகாத்திடும் முயற்சியே டிஜிட்டல் நூலகப்பணியாகும்.
மத்திய அரசின் இன்டியன் ஹெரிடேஜ் போர்டல் மற்றும் மேனுஸ்கிரிப்ட் மிஷன், சென்னையிலுள்ள தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழிணையப் பல்கலைக்கழகம், மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுவையிலுள்ள பிரெஞ்சு இண்டியூட் ஆப் பாண்டிச்சேரி மற்றும் பெங்களூரிலுள்ள இண்டியன் இன்டியூட் ஆப் சைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் நூலகப்பபணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. அழிந்து வரும் புத்தகங்களையும், ஓலைச்சுவடிகளையும் ஸ்கேனிங் செய்து பாதுகாக்கப்படும் பணியே முதற்கட்டமாக செய்யப்படுகிறது.
பிற்காலத்தில் இவையனைத்தையும் டெக்ஸ்ட், ஆடியோ, வீடியோ பைல்களாக மாற்றப்பட்டோ அல்லது தயாரிக்கப்பட்டோ சாதனைகள் நடைபெறலாம். இம்முயற்சிகளால் யாவரும் பழமையான தமிழின் எந்த படைப்பையும் அறிந்திடலாம். டிஜிட்டல் லைப்ரரி பணியால் வேலைவாய்ப்பும் பெரிய அளவில் பெருகி வருகிறது.