|
|
|
|
|
|
|
|
|
கணித்தமிழ் மூன்று நாள் பன்னாட்டுக்கருத்தரங்கம் சென்னைப் பலகலைக்கழகத்தில் துவங்கியது,
கருத்தரங்கை அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.மு.ஆனந்த கிருஷ்ணன்
மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை அவர்கள் துவக்கி வைத்தனர். தமிழ்
மொழியியல், கணினி வாயிலாக இலக்கணத் தொகுப்பு, யூனிகோட், மின் பதிப்பு பணிகள் ஆகியன
குறித்து சிறப்பு அமர்வுகள் இக்கருத்தரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்க்கணினியின்
வளர்ச்சி மிக மெதுவாக நடைபெறுகிறது. இதனை வேகப்படுத்த நல்ல கல்வி மையங்களும், கல்வியாளர்களுமே
அந்நியநாடுகளில் செல்வமாக கருதப்படுகிறது. ஆகையால் தமிழகத்தில் தமிழ்க்கணினி மொழியியலுக்காக
பிரத்யேகமாக கல்வி மையத்தை துவங்க வேண்டுமென டாக்டர்.மு.ஆனந்த கிருஷ்ணன் பேசினார்.
சிங்கப்பூரில் தமிழ்க் கணினி வளர்ச்சி குறித்து நாண்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஆர்.சிவக்குமார்
எடுத்துரைத்தார். தமிழ் இணைய மாநாட்டின் சிறப்புகள் மற்றும் ஆய்வரங்கம் குறித்து உத்தமத்தின்
இயக்குநர் டி.என்.சி.வெங்கட்ரங்கன் உரையாற்றினர்.மேலும் இவ்விழாவில் இந்திய புள்ளியல்
கழக ஆசிரியர் நீலாதிரி சேகர் தாஸ் மற்றும் அறிஞர் பெருமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
|
|
|
|
|
|
|
|
|
|