நவீன வசதிகளுடன் விண்டோஸ் 7

 

பயனாளர்களின் தேவைக்கேற்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட ஆபரேடிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்டோஸ் 7 என்ற மென்பொருள் வெளியானது. இது புதிய மென்பொருளாக இருந்தாலும், Vista மென்பொருளைக் காட்டிலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலேயே இந்த Windows 7  பற்றி பலவிதமான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. முக்கியமாக புதிய தோற்றத்துடன் கூடிய taskbar, வீட்டில் நெட்வொர்க் அமைத்துக் கொள்ளக்கூடிய Home Group போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

 

சிறப்பு பயன்பாடுகள்

 

இந்த விண்டோஸ் 7 மென்பொருளில் பல்வேறு விதமான வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக Advanced touch வசதிகள், கையால் எழுதுவதை கண்டுபிடித்தல் virtual head disk, பல்வேறு புராசசர் உடன் இணைத்து பயன்படுத்தல், கம்யூட்டரை விரைவில் தயார்ப்படுத்துதல் (Fast booting) போன்றவற்றைக் குறிப்பிடலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் Control Panel எனப்படும் மெனுவில் Text tuner, Display Color Calibration wizard, Gadgets, Recovery, Trouble Shooting, Workspace center, Location and other sensors, Credential Manager, Biometric device, System Icons போன்ற புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும் Task bar என்ற வசதி பயன்படுகிறது. அதாவது திரையின் அடிப்பகுதியில் நீண்ட அளவில் ஒரு பார் வசதி இருக்கும். இந்த bar வசதியில் நாம் செய்யும் அனைத்து வேலைகளும் சிறிய button வசதியுடன் காட்டப்படும், அந்த பட்டனை கிளிக் செய்து Open செய்து கொள்ளவும், அதனை சிறியதாக குறுக்கிக் கொள்ளவும் முடியும். இந்த text bar வசதியில் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ள button வசதியானது மிகவும் முக்கியமானதாகும். Button வசதியினை  Windows 7 மென்பொருளில் ஆரோ பீக்(Aero Peek) என்று அழைக்கிறார்கள். இந்த பட்டன் மூலம் திரையினை சுருக்கி textbar-ல் வைத்திருப்பதோடு, அந்த பட்டன் உள்ளே இருக்கும் பக்கத்தின் தகவல்களையும் மறைமுகமாகக் காட்டும் திறன் கொண்டது. இந்த பட்டனை கிளிக் செய்வதன் மூலம் திரையில் காட்டவோ அல்லது அதனை சுருக்கி வைத்துக் கொள்ளவோ முடியும்.

 

இரண்டு பக்கங்களை ஒரே நேரத்தில் திரையில் காட்டி, அதனை ஒப்பிட்டுப் பார்க்கும் திறன் இந்த பட்டன்களின் மற்றொரு சிறப்பாகும். அதேபோல Windows 7 மென்பொருளில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 (Internet Explorer) மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 (Windows Media Player 12) என்ற இரண்டு மென்பொருள்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மேலும் விண்டோஸ் விஸ்டா மென்பொருளுடன் ஒப்பிடும்போது, விண்டோஸ் 7 பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், Windows 7 மென்பொருளில் கீழ்க்கண்ட மென்பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

 

1.இண்டெர்நெடி எக்ஸ்புளோரர்((Internet Explorer)

2.விண்டோஸ் மீடியா பிளேயர்(Windows Media Player)

3.விண்டோஸ் மீடியா சென்டர்(Windows Media Center)

4.விண்டோஸ் தேடுபொறி (Windows Search)

5.விண்டோஸ் கேட்ஜெட்(Windows Gadget)

மேலும் இந்த விண்டோஸ் 7 மென்பொருளில் 13 வகையான Sound வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக Titled afternoon, Calligraphy, Characters, Cityscapes, Delta, Festival, Garden, Heritage, Landscape, Quirky, Raga, Saranar மற்றும் Sonata போன்றவைகளாகும்.

 

இந்த விண்டோஸ் 7 மென்பொருளானது, 1.Windows 7 Professional 2.Windows 7 Enterprise

3. Windows 7 Vihirate editors ஆகிய 3 வகைகளில் வெளிவருகிறது.

 

VHD எனப்படும் Virtual Head disk வசதியும் இந்த Windows 7 மென்பொருளில் உள்ளது. இந்த VHD என்ற வசதியானது ஒரு சாதாரண Storage போன்று செயல்படக்கூடிய அளவிற்கு சிறந்ததாகும்.

 

Remort Desktop Protocol என்று சொல்லப்படும் வசதியும் Windows 7 மென்பொருளில் உள்ளது. இதனை RDP என்று அழைக்கலாம். இதன் முக்கிய பயன்பாடு, அதிக திறன் வாய்ந்த மல்டிமீடியா சார்ந்த புரோகிராம்களை இயக்குவதாகும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் Video Play back மற்றும் 3D Games போன்றவைகளாகும். அதாவது Direct X போன்ற File-களை நேரடியாக Desktop-ல் பயன்படுத்தும் வசதியினை வழங்குகிறது.