விண்டோஸ் லைவ்

விண்டோஸ் லைவ் என்பது மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளின் முக்கிய சேவை மற்றும் மென்பொருள் தொகுப்பாகும். இதில் அனைத்து அப்ளிகேஷன்களும் ஒன்றுபட்டு கூட்டாக இருக்கும். இவற்றில் முக்கியமாக ரைட்டர், இன்ஸ்டன்ட் மெஸன்ஜர், மின்னஞ்சல், போட்டோ கேலரி, சினிமா தயாரிப்பு, டூல் பார், விண்டோஸ் பாதுகாப்பு ஆகிய சிறப்பு பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

விண்டோஸ் லைவ் டூல்பார் மூலமாக நமக்கு வேண்டிய இணைய சேவையை விரிவுபடுத்தி எளிமைப்பட செய்யலாம். இணையப்பணி தொகுப்பு மற்றும் மின்னஞ்சல் பணிகள் விரிந்துபரந்து செய்திட லைவ் டூல்பார் பணன்படுகிறது.

விண்டோஸ் லைவில் உள்ள குடும்ப சேஃப்டி யூட்டிலிட்டி மூலமாக வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் குழந்தைகள் அனைத்து இணையங்களையும் பார்வையிடுவதை தவிர்க்கலாம். இந்த யூட்டிலிட்டி மூலமாக ஆபத்தான இணையங்களை குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்க முடியும். மேலும் வைரஸ் மற்றும் ஸ்பேம் தொல்லைகளில் இருந்தும் நம் கம்ப்யூட்டரை பாதுகாக்கலாம்.

விண்டோஸ் ரைட்டர் லைவ் மூலமாக வலைபூக்கள் பணி செய்து எழுதிக்கொள்ளலாம். இவற்றில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பதிப்பித்து எழுதிக்கொள்ளலாம். எம்எஸ்என் வீடியோ மற்றும் யூடியூப் வீடியோக்களையும் கையாளலாம். இவற்றில் நமக்கு வேண்டிய எழுத்துக்கள், வண்ணங்கள், இடைவெளிகள், உருவங்கள் ஆகியவற்றை பொறுத்திக் கொள்ளலாம்.

ஐஎம் (இன்ஸ்டன்ட் மெஸன்ஜர்) வெவ்வேறு இடங்களில் இருப்போர் தகவல் பரிமாற்றம் இதன் மூலம் செய்து கொள்ளலாம். டெக்ஸ்ட், புகைப்படம் ஆகியவற்றை சாட்டிங்கில் செயல்படுத்தலாம். இடையிடையே நமக்கு கேம்ஸ் அல்லது இசை தேவையெனில் இயக்கிக் கொள்ளலாம். சாட்டிங் சர்வீஸ் மூலமாக செல்பேசிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

 

மின்னஞ்சல் வசதி மூலமாக நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய பயனாளர்களிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். செல்பேசிகளுக்கு மின்னஞ்சல், மெஸன்ஜர்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.

நமக்கு வேண்டிய புகைப்படத் தொகுப்புகளை போட்டோ கேலரியாக உருவாக்கலாம். புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பை மூவி மேக்கர் மூலம் மாற்றிக்கொள்ளலாம். வண்ண மாற்றங்கள், பெரிதாக்குதல் ஆகிய பணியையும், மின்னஞ்சல் மூலம் பிறருக்கு பகிரும் சேவையும் எளிதாக செய்யலாம்.