|
|
|
|
|
|
|
|
|
விண்டோஸ்7 மிகவேகமாக இயங்கக்கூடிய மற்றும் உறுதியானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம்
விரும்பியபடி கணினியை இயக்க பல சிறப்பு கூறுகள் இந்த இயங்குதளத்தில் உள்ளது. ஜம்ப்லிஸ்ட்
என்ற புதிய கட்டளை மூலமாக ஓரு புகைப்படத்தையோ, பாடலையோ, இணையத்தையோ அல்லது பாடலையோ
இயக்க முடியும். இதிலுள்ள விண்டோஸ் டாஸ்க் பார் மூலமாக படக்காட்சியாக ஐகான்களை சிறிய
அளவில் பார்வையிடலாம். விண்டோஸ் 7இன் பார்டர்களும், டாஸ்க்பார்களும் அழகிய வண்ணம் மற்றும்
சில இடங்களில் கண்ணாடி இழை போல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
|
ஹோம் குரூப் என்ற சிறப்பின் மூலமாக விண்டோஸ் ஹோம் குரூப் என்ற சிறப்பின் மூலமாக விண்டோஸ்7ஐ
இல்லநெட்வொர்க்கிற்கு பயன்படுத்தலாம். விண்டோஸ் கணெக்ட் என்ற சிறப்பின் மூலமாக கம்பியில்லா
நெட்வொர்க் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலுள்ள Wi-Fi வசதியின் மூலமாக புதிய தேவையான
நெட்வொர்க்குகளையும் இணைத்துக்கொள்ளலாம்.
|
|
மடிக்கணினிகளில் விண்டோஸ் மின் வசதியை மிச்சப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இதன்
மூலமாக மடிக்கணினி பாட்டரிகளின் மின் வசதியை மிச்சப்படுத்தலாம். நாம் மடிக்கணினியை
பயன்படுத்தாமல் இருந்தால் தானாக எல்சிடி திரையின் வெளிச்சத்தை மங்க வைத்து மின்சாரத்தை
மிச்சப்படுத்தும். |
|
புதிய விண்டோஸ்7ல் லைப்ரரி வசதி உள்ளது. இதன் மூலமாக 50 இடங்களில் நம்முடைய கோப்புகள்,
புகைப்படங்கள், திட்டங்களை லைப்ரரி மையமாக்கலாம்.
|
|
விண்டோஸ் 7 திரையை இயக்கியவுடன் சர்ச்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. கோப்புகள், டைரக்டரிகள்,
நிரல்கள் மற்றும் புகைப்படங்களை நாம் தேட வேண்டுமெனில் சர்ச் ஆப்ஷனில் பெயரை அளித்தால்
உடனடியாக தேடி அளித்துவிடும். விண்டோஸ் டச் ஸ்கிரீன் டெக்னாலஜியாக இயக்கலாம். விண்டோஸ்
7 திரைகளை தொடுதிரையாக நாம் பயன்படுத்தும்போது புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்த தொடுதிரை முறைக்கு 3டி விச்சுவல் எர்த் கணினித்திரைகளை நாம் பெற்றிருக்க வேண்டும்.
விண்டோஸ் 7 இயங்குதள வரிசையில் சிறப்பான ஒன்று என குறிப்பிடலாம்.
|
|
விண்டோஸ் 7ஐ இயக்க என்னென்ன தேவை.
- 1 ஜிஹா ஹெர்ட்ஸ் (GH2) அல்லது வேகமாக 32bit. (X86) அல்லது 64 bit (X 64) ப்ராசசர்
- 1 ஜிஹா பைட் (GB) RAM (32 bit) அல்லது 2GB RAM (64 bit)
- 16 GB குறைந்தபட்ச ஹார்ட் டிஸ்க் தேவை
- Direct 9 கிராபிக்ஸ் டிவைஸ் உடன் WDDB 1.0 அல்லது உயரிய கருவி.
|
|
|
|
|
|
|
|
|
|