புத்தக விமர்சனம்

தம்பியின் தமிழ் அகராதி
சங்க இலக்கியங்களே தமிழுக்கு பெருமையெனக் கூறலாம். தமிழில் பல்வேறு வகையான அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் வெளியாகியுள்ளன. இதற்கு அப்பாற்பட்டு ஒரு படி கூடுதலாக, தமிழுகு புதுவரவாக தம்பியின் தமிழ் அகராதி என்ற புதுமையான தொகுப்பு வெளியாகியுள்ளது. தமிழில் கலந்த பிற மொழி சொற்களும், வட்டார வழக்குகளும் தொகுப்பாக வெளியாகியுள்ளதே இவ்வகராதியின் சிறப்பம்சமாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் அ. ராஜ் மோகன் தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகர வரிசையில் அகராதி தொகுக்கப்பட்டிருந்தாலும், பிற மொழி சொற்கள் தனித்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
கிடைக்குமிடம் :
உமா பதிப்பகம்
171,(புதிய எண். 18), பவளக்காரத் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001
ஆசிரியர்: அ.ராஜ் மோகன்
விலை: ரூ. 130-00