விண்டோஸ் மீடியா பிளேயரின்
சிறப்பு வசதிகள்
கம்ப்யூட்டரில் ஒலிஒளி பைல்களை செயல்படுத்துவதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் என்ற மென்பொருள் பயன்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடான இந்த மென்பொருளைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் அனைவரும் விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட மீடியா பிளேயரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 பதிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மீடியா பிளேயர் மென்பொருளை விண்டோஸ் சம்மந்தமான எந்த வகையான ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்டோஸ் 7 உடன் மீடியா பிளேயர் 12 பதிவு சமீபத்தில் வெளிவந்ததாகும். அவற்றில் உள்ள சில வசதிகளைக் காணலாம்.
1. Activity tabs: பல வேலைகளை இந்த Activity tabs மூலம் எளிதாகச் செய்ய முடிகிறது. உதாரணமாக, Play, Burn மற்றும் Sync போன்றவற்றை மிக விரைவில் தேர்வு செய்யும் வசதியினை வழங்குகின்றது.
2. Instant Search: இக்கட்டளை மூலம் நமக்குத் தேவையான வசதிகளை விரைவில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மீடியா பிளேயர் 12-ல் எளிதாக நமக்குத் தேவையான வசதிகளைத் தேடி பயனுக்கேற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
3. Stacking: ஆல்பத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் இருந்தால் அவற்றை ஸ்டாக்ஸ் (Stacks)என்ற பெயரில் ஒரு சிடி (CD) போலவோ அல்லது ரெக்கார்டு போலவோ அமைத்துக் கொள்ளலாம். வீட்டில் சிடிக்களை நமது டேபிள் மேலே வரிசையாக ஒழுங்குபடித்தி அமைத்துக் கொள்வதுபோல இதனையும் வரிசையாக அமைத்துக் கொள்ளலாம்.
4. Network Sharing: HomeGroup வசதி மூலம் நண்பர்களிடம் உள்ள பாடல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு i Tunes Media Libraries என்ற பெயரில் பிரவுசிங் செய்யக்கூடிய வசதியினை மீடியா பிளேயர் 12 வழங்குகிறது.
5. Preview: Library view என்ற வசதியின் உள்ளே வரிசையாகத் தரப்பட்டிருக்கும் பாடல்களில் அல்லது வீடியோக்களில் நமக்குத் தேவையான பாடலை அல்லது வீடியோ காட்சியை 15 வினாடிகளுக்கு Preview என்று சொல்லக்கடிய முன்னோட்டமாக காணலாம். இந்த வசதி மற்ற மீடியா பிளேயர்களில் கிடையாது.
6. Play to: இவ்வசதியானது Homegroup என்ற வசதியில் பயன்படுத்தப்படுவதாகும். அதாவது ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் பாடல்களை மற்றொரு கம்ப்யூட்டரில் இயக்கிக் கொள்ளலாம்.
7. Codec Updates: பல்வேறு தரங்கள் மீடியா பிளேயர் 12-ல் உள்ளன. உதாரணமாக, H .264, AAC Audio, Xvid மற்றும் Divx video போன்றவற்றைக் கூறலாம். இவை மட்டுமல்லாமல் மீடியா பிளேயர் 11-ல் உள்ள வேறு சில தரங்களான MP EG2, WMV மற்றும் MP3 போன்றவைகளையும் இந்த மீடியா பிளேயர் 12 ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
8.Remote Streaming: கம்ப்யூட்டர்கள் நெட்வொர்க் முறையில் இணைக்கப்பட்டு இன்டர்நெட் மூலம் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் audio / Video Playback வசதிகள் கொண்டதாக இருக்கும். இந்த Library View என்ற வசதியில் Allow internet Access என்ற லிங்கை கிளிக் செய்து வேறு இடத்தில் இருக்கும் கம்ப்யூட்டரை, நமது கம்ப்யூட்டரிலிருந்து இயக்கிக் கொள்ள முடியும். அதாவது ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) போன்று செயல்படும் தன்மை கொண்டது.