புத்தக விமர்சனம்
விண்டோஸ் எக்ஸ்பி
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேடிங் சிஸ்டம் குறித்த நூலை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ்க்கணினி எழுத்தாளர்களில் பிரபலமான கே.சுந்தர்ராஜன் இந்நூலை எழுதியுள்ளார். 296 பக்கங்களுடைய இந்நூலில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் ஒவ்வொரு கட்டளைகளும், மெனுக்களும் அழகுபட விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பியின் அறிமுகம், விண்டோஸ் எக்ஸ்பியை நிறுவும் முறை, அடிப்படை விவரங்கள், டெக்ஸ்டாப், யூசர்கள், புரோகிராம்கள், பாதுகாப்புகள், விருப்பத்திற்கேற்ப விண்டோஸ் எக்ஸ்பியை மாற்றி அமைக்கும் முறை மற்றும் கூடுதல் வசதிகள் என அனைத்தும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டளை இயங்குமுறை மற்றும் அதற்கான தீர்வையும் எழுத்தாளர் பாமரருக்கும் எளிமையாக புரியம் வண்ணம் எழுதியுள்ளார்.