கம்ப்யூட்டர் வைரஸ் – புத்தக விமர்சனம்


                தொழில் நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு மின்னனு சாதனம் கம்ப்யூட்டர். எல்லா அலுவலகங்களிலும் கம்யூட்டரின் பயன்பாடு  முக்கியமானது ஆகும். அதிக விலை கொடுத்து ஒரு பொருள் வாங்குபவர்கள் அதற்கு பாதுகாப்பு சாதனம் கொடுத்து வாங்க தயங்குவார்கள். அதிக விலை பொருள் பாதுகாப்பு இல்லாமல் சேதாரம் ஆகும் பொழுது தான் நமக்கு அதன் அருமை தெரிய வரும்.

 

இந்த விதி கம்ப்யூட்டருக்கும் பொருந்தும். 20 ஆயிரம் முதல் 50ஆயிரம் மேல் விலை கொடுத்து கம்யூட்டர் வாங்குபவர்கள். அதற்கு பாதுகாப்பாக வைரஸ் சாப்ட்வேர்கள் இணைக்கமாட்டார்கள். பொதுவாக கம்ப்யூட்டர் துறைக்கு நூல்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும்.

 

வைரஸ் சாப்ட்வேர்கள் இணைக்க வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன என்பது விளக்கும் தமிழ் புத்தகம் தான் ”கம்ப்யூட்டர் வைரஸ்”. என்னென்ன வைரஸ் சாப்ட்வேர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலும் விரிவாக வைரஸ் என்றால் என்ன எவ்வாறு சந்தைக்கு வருகிறது என்பதை இந்நூல் விளக்குகிறது. மேலும், செல்பேசி வைரஸ்கள் பற்றியும், பயனுள்ள இணையங்கள் குறித்த விவரங்களையும் கூறியுள்ளார். கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் வகையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்நூல் அமைந்துள்ளது.

 

தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி தமிழ்நாட்டில் கணினி அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில், இத்தகைய நூல்கள் வெளியிடப்படுவது வரவேற்கத்தக்கது.

 

எந்த நாட்களில் வைரஸ் இயங்காது என்பது போன்ற பல தகவல்களை அடக்கியுள்ளது.  வைரஸிலிருந்து கணினியை காப்பது எப்படி ? புகழ்பெற்ற வைரஸ்களின் பட்டியல்,பிரபலமான வைரஸ் தடுப்புகள் மென்பொருள்களின் பட்டியல், வைரஸ் பாதிப்புகள் , ஸ்பைவேர் அட்வேர் என இந்த கம்யூட்டர் வைரஸ் புத்தகத்தில் விளக்கமாகவும் தெளிவாகவும் அனைத்து தரப்பினரும் புரிந்து பயன்பெறும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.

 

மேலும்...