தமிழ் கணினி ஆய்வகம்
தமிழ் கணினி ஆய்வகம் (தகஆ) அண்ணா பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் கடந்த 10 ஆண்டுகாலமாக, சென்னையில், செயல்படுகின்றது. இயல்பு மொழி யாக்கம் எனும் துறையில் தமிழிற்கு முக்கியத்துவம் அளித்து உயர் தரமுள்ள ஆராய்ச்சியையும் உருவாக்குதலையும் மேற்கொள்ள சிறப்பு கவனம் செலுத்துகின்றது. தமிழ் மொழியியல் தொழில்நுட்பம் உரை துழாவுதல், தகவலைத் தேடிக் கண்டறிதல், பேச்சு, இசை இயக்கம், உரைக்கு அசைவு ஊட்டுதல், இன்னும் பல வகைகள் கணினி ஆய்வகத்தின் (தகஆ) இலக்கில் அடங்கியுள்ளன. 35 மேற்பட்ட உயர் தரமுள்ள குறிப்பேட்டுக் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற ஆராச்சிகளில் பலவேறு மென்பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன
தொழில்நுட்பக் கருவிகளும் மென்பொருட்கள் சில் கீழே தரப்பட்டுள்ள. அட்சரம் (மொழி உருபனியல் பகுப்பான்), அட்சயம் (மொழி உருபனியல் இயற்றுவான்), கதம்பம் (பேச்சுப் பகுதி அடையாளம் காண்பான்) வானவில் (வாக்கிய இலக்கணம் காண்பான்),அன்னம் (சொல்திருத்தி), வாழினி (உலகளாவிய ஒருங்கிணைப்பு மின்மொழியாக மாற்றுவான்), பூங்குழலி (அரட்டை அரங்கம்), குருகுலம் (காட்சிவழி பயிற்சிகள்), சொல் அலைகள் (தமிழிற்கான முதலாவது சமுயாய ஓருங்கிணைப்பு பகுப்பாய்வுக் கருவி),எதிரோலி (தமிழ் உரையை பேச்சாக மாற்றும் பொறி), பொம்மலாட்டம் (உரையை ஒளிப்பட முறையாக மாற்றுதல்), அரங்கம் (தமிழில் விளக்கும் கருவி), பலகை (தமிழ் சொல்முறை இயக்கி), சதுரங்கம் (தமிழ் அட்டவணைத் தாள்), தூக்குத் தூக்கி (கணினியில் தமிழ் தூக்குமனிதன் விளையாட்டு), மிருங்கினா ஜம்போ (சண்டையற்ற கணினி விளையாட்டு), கோரீ (கருத்து வழி தேடு பொறி), மற்றும் அகராதி (இணையத்தில் இயங்கும் தமிழ் அகராதி),
மேற்காணும் திட்டங்களில், கோரீ மற்றும் அகராதி ஆகியவைகள் இன்னும் தயாரித்து. முடியவில்லை. கோரீ என்பது இந்திய மொழிக்கு ஒன்றுக்கு முழுவதுமாக கருத்துவழி செயல்படும் தேடுபொறியை முதன் முதலாவதாக உருவாக்கப்படுகின்றது. முக்கியச் சொற்களை நினைவு கொள்ளும் வழக்கமான தேடு பொறியைப் போலல்லாமல் இந்தித் தேடுபொறி முதலில் இணைய ஆவணங்களை புரிந்து கொள்ள முயல்கின்றது. இணைய ஆவணங்களை கருத்துக்கள் மற்றும் அவற்றின் தொடர்புகளையும் தொகுப்பாக பட்டியலிடுவது கோரியின் நோக்கம் இருக்கின்றது. வழக்கமான தேடுபொறிகளை ஒப்பிடும் போது சிறப்புப் படிவ அமைப்பில் கோரீ முடிவுகளை தருகின்றது என்பதுநிருபிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் படிவ அமைப்பில் முடிவுகளைத் தருகின்ற உலகின் முதல் தேடுபொறியாக கோரீ உள்ளது. தமிழ் கணினி ஆய்வகத்தில் மேம்படுத்தி வடிவமைத்த கோரீ “கோரீ தேடும் கட்டமைப்பு” மற்றும்“கோரீ அடைவுக் குறிப்பு” ஆகியவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. குறுக்கு ஒலித் தகவல் அணுகு சேர்த்தியத் திட்டத்தில் கோரீயின் தற்போதய பதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் உருவாக்கிய பல மொழிகளின் தொழில்நுட்ப் கருவிகளை ஒன்றிணைத்துத் தரும் ஒரு முக்கியப் பொருளாக அகராதி உள்ளது. அகராதி.காம் என்பது தமிழ் ஆங்கிலத்திற்கு இணையத்தில் நேரடி அகராதியாக இருக்கின்றது. இணைய பக்கத்தில் சொற்களுக்குப் பொருள் தருவதுடன் அந்த சொல்லின் 20 சிறப்புகளைக் கூறுகின்றது. சொல்லின் இனிமை மதிப்பெண், சொல்லின் புகழ் மதிப்பெண், உருபனியல் பகுப்பாய்வு, உருபனியல் ஆக்கம், சொற்பிழை திருத்தி, மாற்றுச் சொல் யோசனைகள், எண்ணில் இருந்து உரை, ஒலியல் எழுத்துப் பெயர்ப்பு, பட அகராதி, பட இருப்பிடம், சமூக இணையதளப் பங்கு, அரட்டை மேம்பாடுகள், ஈடான தற்போதய சொல், குறள்கள், பாரதியார் பாட்டுகள், அவ்வையார் பாட்டுகள் போன்ற அச்சொல்லுக்கான இசைப்பாடல் ஆகியவைகள் அந்தச் சிறப்புகளில் சில.