Go Search


மைக்ரோசாஃப்ட் ஆசிய ஆராய்ச்சி மையம்


பெய்ஜிங் லேப் என்ற பெயரில் இயங்கிவந்த இந்த ஆய்வு மையம், இப்போது மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆசியா என்று அழைக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த ஸ்தாபனம், ஆசிய-பசிபிக் பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடிப்படை ஆய்வகமாக இயங்கி வருகிறது. கணினித் துறையில் திறமைவாய்ந்த ஆய்வாளர்களைக் கவர்ந்து, உலகத்தின் சிறந்த கணினி அறிவியல் ஆய்வகமாக சிறந்து விளங்குவதே மைக்ரோசா̀ப்ட் ரிசர்ச் ஆசியாவின் குறிக்கோளாகும்.


இன்றைய தேதிவரைக்கும், இந்த ஆய்வகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் உலகின் சிறந்த சர்வதேச இதழ்கள் மற்றும் மாநாடுகளுக்காக 3,000 க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இவற்றில் 260 க்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள், விண்டோஸ் 7,ஆஃபீஸ் 2010, பிங், எக்ஸ் பாக்ஸ், கைனெக்ட், விண்டோஸ் லைவ் போன்ற தற்போதைய மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளிலும், முந்தைய மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.இந்த ஆய்வகத்தின் சில தொழில்நுட்பங்களை சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் பயன்படுத்தியுள்ளன, அவை: வீடியோ பரிமாற்றத்தினால் ஏற்படும் பிழை-மீள்வரு நிலையை MPEG-4 தொழிற் கூட்டமைப்பு; TCP/IP ஹெட்டர் கம்ப்ரஷனை இண்டர்நெட் இன்ஜினியரிங் டாஸ்க் ஃபோர்ஸ் (IETF) ஆனது மதிப்பாய்வு செய்தது; மேலும் வீடியோ கம்ப்ரஷன் தொழில்நுட்பத்தை இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன்/இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (ITU/ISO) மதிப்பாய்வு செய்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆசியா ஆய்வகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, சுமார் 230 ஆய்வு அறிவியலறிஞர்களும் பொறியாளர்களும் பணியாற்றுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட அறிவியலறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளர்களாக இங்கு வருகை புரிகின்றனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நீண்டகால நோக்கம் மற்றும் கட்டமைப்பை மையப்படுத்தும் ஐந்து முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான ஆய்வுத் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆசியா ஆய்வகமானது இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது:

  • இயற்கையான பயனர் இடைமுகங்களானது பேச்சு, குறிப்புணர்விகள் மற்றும் வெளிப்பாடுகளைக் கொண்டு கணினியுடன் பயனர் உரையாடும் வசதியை அளிக்கிறது.
  • அடுத்த-தலைமுறை மல்டிமீடியாவானது ஆன்லைன் ஷாப்பிங், கல்வி, சந்திப்பு மற்றும் பொழுதுபோது செயல்பாடுகளில் தங்களுக்கானதை தேடவும், அதில் தங்களது நேரத்தைச் செலவிடவும் பயனர்களை அனுமதிக்கிறது.
  • தரவு-தொடர்கவன கணினிப் பணியானது புதிய கட்டமைப்புகளையும், அல்காரிதம்களையும், சேமிக்க வேண்டிய கருவிகள் மற்றும் பயன்பாடுகளையும் ஆய்வுசெய்து, வாடிக்கையாளர் மற்றும் பெருநிறுவன துறைகள் இரண்டிலும் தரவு-தொடர்கவனம் சார்ந்த முடிவுகளை வெளிப்படுத்துகிறது.
  • தேடல் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களானது தரவு-கொணர்வு, இயந்திர-கற்றல், தகவல் ஆய்வு, ஒருங்கிணைப்பு, மீட்டல் மற்றும் காட்சிப்படுத்தலுக்கான தொழில்நுட்பங்கள் மூலம் வலைத் தேடல் மற்றும் ஆன்லைன் விளம்பரமாக்கலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
  • அடிப்படை கணினி அறிவியலில் பல பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்படுத்தக்கூடிய கோட்பாடு சார்ந்த கணினி அறிவியல் (கோட்பாடு), சிஸ்டம்ஸ், நெட்வொர்க்கிங் மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

கணினி அறிவியல் ஆய்வில் உயர்நிலையை அடையும்பொருட்டு ஆய்வுத் திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆசியா தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக, ஆசிய-பசிஃபிக் பகுதியில் உள்ள கல்வி சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களுடன் ஒரு மேம்பட்ட உறவை இந்த ஆய்வகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாடானது, படைப்புத்திறனுள்ள ஆய்வு மற்றும் மேம்பட்ட கல்வி ஊக்குவிப்பு, கல்விசார்ந்த கூட்டிணைவுகளை வளர்ப்பதற்கு வழிவகுத்துள்ளது. முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:

  • இணைந்த ஆய்வு. இணைந்த ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் இணைந்த ஆராய்ச்சித் திட்டங்களிலிருந்து, படைப்புத்திறன்மிக்க ஆராய்ச்சிக்கான கூட்டாளர் திட்டம் என்று பரந்து விரிந்துள்ளது. தற்போது, மெயின்லாண்டு சீனா மற்றும் ஹாங்காங்கில், இணைந்த பத்து ஆய்வகங்களை இந்த ஆய்வகம் கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், Microsoft Institute for Japanese Academic Research Collaboration (IJARC) அமைப்பை டோக்கியோவில் மைக்ரோசாஃப்ட் உருவாக்கியது. IJARC ஆனது புதுவகை கூட்டுப்பணி அமைப்பு முறையாகும். இது அடிப்படை ஆய்வு உருவாக்கம் மற்றும் ஜப்பானிய கல்வி நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவது போன்றவற்றிற்கு வழிவகுத்துள்ளது. ஜப்பானில் மைக்ரோசாஃப்ட்டின் ஆய்வு திட்டங்களைக் காக்கும் பாதுகாவலனாக IJARC செயல்படுகிறது.
  • உள்ளிருப்பு பயிற்சி. இந்த ஆய்வகத்தில் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட உள்ளிருப்பு பயிற்சியாளர்கள் பலனடைந்துள்ளனர். அவர்களில் சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கணினி அறிவியல் மற்றும் மின்னணு பொறியாளர் முனைவர்கள் அடங்குவர்.
  •  ̀ஃபெல்லோஷிப். முனைவர் பட்டம் பெற படிக்கும் மாணவர்கள், எதிர்கால ஆய்வுத் தலைவர்களாகக்கூடிய அளவிற்கு தங்களிடமுள்ள ஆய்வு தொடர்பான புதுமையை வெளிப்படுத்துவதற்கு இந்த கூட்டுணர்வு திட்டம் ஆதரவளிக்கிறது. இதன் தேர்வு செயலாக்கம் மற்றும் சிறந்த பல்கலைக் கழகங்கள் இடையிலான தீவிர போட்டியாக இந்த திட்டம் அறியப்படுவதில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. சுமார் 200 மாணவர்கள் இதுவரை ஃபெல்லோஷிப் பெற்றுள்ளனர்
  • போஸ்ட்-டாக்டரல் திட்டம். சீனாவின் கல்வி மற்றும் தகவல்தொழில்நுட்ப துறைகளில் சிறந்தவர்களைப் பயிற்றுவிக்க உதவும்பொருட்டு, கணினித் துறையில் போஸ்ட்-டாக்டரல் திட்டத்தை ஏற்படுத்த, ஒப்புதல் அளிக்கப்பட்ட முகவர் சான்றிதழை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த பெருமைக்குரிய நிலையை அடைந்த முதல் வெளிநாட்டு நிறுவனம் மைக்ரோசாஃப்ட் ஆகும்.
  • ஆசிரிய உச்சி மாநாடு. ஆசிய-பசிஃபிக் பகுதி எங்கிலும் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட கல்வித் துறை முதல்வர்களும், பேராசிரியர்களும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு ஆசிரிய உச்சி மாநாடு நிகழ்வில் பங்கேற்று கணினித் துறையில் முக்கிய வளர்ச்சியடைவதற்கான மைக்ரோசாஃப்ட் ரிசர்ச்சின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆய்வு மற்றும் கல்வி தொடர்பான தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். சமூக செயல்பாடுகள் மற்றும் அனுபவ பகிர்வை உருவாக்குவதற்கு, ஆய்வு பயிற்சி தொழிலகங்களும், ஆசிரிய பயிற்சிகளும் இதில் நடைபெறுகின்றன.
  • 21 ஆம் நூற்றாண்டில் கணினியியல் - மாநாடு. 1999 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வரும் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆசிய ஆண்டு நிகழ்வில் இதுவரை சுமார் 30,000 மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். கணினிப் பணியில் நோபல் பரிசாகக் கருதப்படும் Turing Award ஐ வழங்குவதற்கு 12 அழைப்பாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் அவர்கள் எதிர்கால கணினிப் பணியில் தங்களுக்கான நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வானது சீனா மற்றும் உலகில் உள்ள கணினி அறிவியல் துறை சார்ந்தவர்கள் இடையிலான உறவை வலுப்படுத்தக்கூடிய ஆதாரமாக விளங்கி ஆசியா-பசிஃபிக் பகுதியில் நடைபெற்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கலந்துரையாடலாக அமைந்தது.

மேலும்...

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint Server.
©2013 Microsoft Corporation. All rights reserved.