வலைப்பக்கம் எழுதுதல்

 

 

             எழுத தெரிந்த அனைவருமே எழுதுவார்கள் எழுதியதை அவர்களே படிப்பார்கள் , அப்படி எழுதியதை மற்றவர் படித்து பாராட்டும் போதும் விமர்சிக்கும் போது தான் அந்த எழுத்தின் அருமை தெரிய வரும். பத்திரிக்கை ஆரம்பிக்க ஆசைப்படுவோருக்கு அவ்வளவு விரைவில் அந்த ஆசை நிறைவேறிவிடாது ஏனெனில் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ளவற்றிற்கு அரைகுறையாய் அர்த்தம் புரிந்தவர்களுக்கு அடுத்தடுத்த வரிகள் அர்த்தத்தை கொடுக்கும். இணையத்தில்  எழுதுதல் பற்றிய துவக்க உரை தான் அது.

 

           இணையதளம் பயன்படுத்துவோரில் எழுத ஆசைப்படுவோருக்கு ஒரு பயன்பாடு தான் ப்ளாக்கு எழுதுதல் ஆகும். உங்களுக்கு என இருக்கும் மின்னஞ்சல் முகவரியை ப்ளாக் இணையத்தில் இணைத்து புதிதாக ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி விடலாம்.

 

           எழுத தெரிந்தவர்கள் அதை மற்றவர் படிக்க ஆசைப்படுவோர் வலைப்பக்கம் எழுதலாம். உங்களுக்கு என தனி வலைப்பக்கம் ஆரம்பிப்பதாலும் அதில் தொடர்ந்து எழுதுவதாலும் முதல் பாராவில் குறிப்பிட்டவை இப்போது புரிந்து இருக்கும். வலைப்பக்கத்தில் எழுதுவதால் உங்களுடைய கருத்துக்கள் ஒரே நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்து படிக்க முடியும். அனைத்து விதமான தலைப்புகளிலும் எழுதலாம் . எழுதனும் அது தான் முக்கியம்.

 

வலைப்பக்கம் ஆரம்பித்தல்

 

www.wordpress.com  எனும் வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டும் அதனுள்ளே ப்ளாக் உருவாக்க என இருப்பதை க்ளிக் செய்து உள்நுழைய வேண்டும். நீங்கள் உருவாக்கப்போகும் வலைப்பக்க பெயரினை இட வேண்டும். வலைப்பக்க பெயருக்கு பின்னே worldpress .com என வந்தால் இலவசம் . அதை தவிர வேறு எதாவது வந்தால் .me .com .net .org  என வரவேண்டுமானால் அதற்கு பணம் கட்ட வேண்டும்.

 

பிறகு பயனர் பெயர்- கடவுச்சொல்- மீண்டும் கடவுச்சொல்லை உறுதி செய்து மின் அஞ்சல் முகவரியை தரவேண்டும் இவை அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யாதிருப்பினும் ஏற்றுக்கொள்ளப்படும் இல்லையெனில்  மாற்றப்ப டவேண்டும்.

 

எந்த மொழியில் வேண்டுமென தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்த பக்கத்திற்கு சென்றால் முதல் பெயரும் கடைசி பெயரும் கொடுக்கப்பட வேண்டும் பின் வலைப்பக்கத்திற்கு சிறு விளக்கம் தரவேண்டும். எல்லா விவரமும் தந்த பிறகு அடுத்த பக்கத்திற்கு சென்றால் மின்ன்ஞ்சலை பார்க்கவும் என அளிக்கப்படும். நமது மின்னஞ்சலை பார்த்தால் புதிய வலைப்பக்கம் உருவாகிவிட்டது என அளித்த அனைத்து விவரமும் காட்டப்பட்டதை சரி என்றால் புதிய வலைப்பக்கம் உருவாகிவிட்டது. 

 

யார் வேண்டுமானாலும் எழுதலாம். எதைப்பற்றி வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானால்  ஒரு நாளைக்குப் பலமுறை  பல நாட்களுக்கு ஒருமுறை என எப்போது வேண்டுமானாலும் வலைப்பக்கம் எழுதலாம்.  செய்தி பாணி, கட்டுரைகள் ,படங்கள், செய்தி அலசல், கவிதை, கதை, கட்டுரை, பயணங்கள் , ஆடியோ, வீடியோ  இப்படி  எதை வேண்டுமானாலும் எழுதலாம், சேர்க்கலாம்.

 

வலைப்பதிவுகள்  முழுநேர  இணைய  செய்தித் தளங்கள்  அல்ல  ஆனால், மொத்தமாகப் பார்த்தால் அவை வித்தியாசமான பார்வையைத் தருகின்றன. செய்தி ஊடகங்கள் செய்யாத செயலைச் செய்கின்றன.

 

சிறுபான்மைப்  பார்வையை  முன்வைக்கின்றன. மாற்று ஊடகவெளியை உருவாக்குகின்றன. அத்தியாவசியமான இடத்தை ஏற்கெனவே பிடித்துவிட்டன. மிக எளிது. யூனிகோட் தமிழில் எழுதத் தெரிந்தால் போதும். படங்களைச் சேர்த்தல், ஒலி, ஒளித் துண்டுகளைச் சேர்த்தல் மிக எளிது. செல்பேசி போதும், அசையும் அசையாப் படங்களைப் பிடித்து வலையேற்றி, பதிவில் செருகி வலைப்பதிவர் ஆகிவிடலாம்...

 

 

மேலும்...