வலைப்பூக்கள் திரட்டி
தேடுபொறிகள் கோப்புகளை திரட்டுவது போல, வலைப்பக்களை (பிளாக்குகள்) திரட்டும் பணியும் அவசியமாகிறது. இவை வலைத்திரட்டிகள் என அழைக்கப்படுகிறது. வலைத்திரட்டிகளில் முக்கியமான மற்றும் வலைபூக்களுக்கு அதிக வாசகர்களை அளிக்கும் இணையம் ஆன இன்ட்லி பற்றி பார்ப்போம். இத்திரட்டி மூலம் நம்மை தொடர்வதால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறமுடியும். இதனால் படிப்பவர்கள் பக்கத்தில் பெற முடியும். இதனால் படிப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்கின்றது.
இந்த இன்ட்லி தளம் அண்மைக்காலமாக புதிய ஏராளமான மாற்றங்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய இன்ட்லி ஃபாலோவர் (Indli Follower) என்ற விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது. இவ்விட்ஜெட்டை நம்முடைய வலைப்பூவில் இணைப்பதால் வலைப்பூ வாசகர்கள் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள ‘தொடர்க’ என்ற பட்டனை அழுத்தி எளிதாக நம்மை பின்தொடரலாம். இதற்காக இன்ட்லி தளத்திற்கு ஒவ்வொரு முறையும் செல்ல தேவையில்லை.
நம்முடைய வலைப்பூவில் இணைப்பதற்கு http://ta.indli.com என்ற தளத்திற்கு சென்று அந்த தளத்தில் உள்ள, புதியதாக Follower Widget என்பது இருக்கும். இதில் பயனாளர் பெயர் என்ற இடத்தில் wikupficwa என்றவாறு பெயர் இருக்கும். அகலம், படவரிசை, தலைப்பு ஆகியவற்றை இத்தளத்தில் உள்ளீடு செய்ய மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றங்களை செய்தவுடன் கீழே விட்ஜெட்டுக்கான நிரல்தொடர் தோன்றிய பின், அதனை நகலெடுத்து கொள்ளலாம்.
நம்முடைய வலைப்பூ பக்கத்திற்கு சென்று, Design என்ற பொத்தானை தேர்வு செய்து சொடுங்குங்கள். பிறகு வலைப்பூவின் வடிவமைப்பு திரையில் Add a Gadget என்ற பொத்தானை தேர்வு செய்து சொடுக்க வேண்டும். உடன் தோன்றும் Blogger : Add a Gadget என்ற திரையில் HTML/Java Script என்பதை தேர்வு செய்து சொடுங்குங்கள். பின்னர் தோன்றிடும் திரையில் ஏற்கெனவே நகல் எடுத்த நிரல் தொடரை ஒட்டி சேமித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக நிரல் தொடருக்கு கீழ்ப்பகுதியில் உள்ள Add to Blogger என்ற பொத்தானை தேர்வு செய்து சொடுக்குங்கள். உடன் தோன்றும் Add page Element என்ற திரையில் Add Wedget என்ற பொத்தானை தேர்வு செய்து சொடுக்க வேண்டும். பிறகு வாசகர்கள் இன்ட்லி தளத்திற்கு செல்லாமலேயே நேரடியாக இந்த விட்ஜெட்டின் மூலம் வலைப்பூவை பின் தொடரலாம். தமிழ் வலைப்பூக்களுக்கு இன்ட்லி தளம் பெரும் பாக்கியமாகும்.