விண்டோஸ் 8 டெவலப்பர்முன்னோட்டம்

 


           விரைவில் வெளிவரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முன்னோட்டக் காட்சி, அதன் டெவலப்பர் குழுவிற்கு சமீபத்தில் நடைபெற்ற பில்ட்(BUILD)கருத்தரங்கில் காண்பிக்கப்பட்டது. வெவலப்பர்கள் மற்றும் வன்பொருள் கூட்டாளர்களுக்கென பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பில்ட் கருத்தரங்கில் விண்டோஸ் 8 இயங்கு தளம் குறித்த பல்வேறு அம்சங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் விளக்கப்பட்டன. பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இந்த அமர்வுகளில் பகிர்ந்து கொள்ளப்பட்டன, அவை தொடர்பான ஸ்டிரீம்கள் http://buildwindows.com வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.


           டெவலப்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கின் வாயிலாக, விண்டோஸ் இயங்குதளம், கருவிகள், ஏ.பி.ஐ.க்களில் மறைந்துள்ள அற்புதமான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் தெளிவாக விவரிக்கப்பட்டன. எந்த வகையான கணினிகளை விண்டோஸ் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினாலும், அவர்களுக்கேற்ற வகையில் பயன்பாடுகளை எப்படிக் கட்டமைப்பது என்றும் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்டது.


           எச்.டி.எம்.எல்.5/ஜாவாஸ்கிரிப்ட், சி/சி++ மற்றும்/அல்லது சி#/எக்ஸ்.ஏ.எம்.எல் மொழிகளில் மெட்ரோ பாணி பயன்பாடுகளைக் கட்டமைக்க உதவும் புதிய கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் கருத்தங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கருவிகளின் மூலம், x86 (32 மற்றும் 64 பிட்) பிராசஸர்களில் தட்டையின்றி இயங்கும் மெட்ரோ பாணி பயன்பாடுகளை மிகச் சுலபமாகக் கட்டமைக்க உதவும். பயனர்களுக்கான ஈடு இணையில்லா இயங்குதளமாகவும், டெவலப்பர்களுக்கான ஈடு இணையில்லா தளமாக விளங்கும் விண்டோஸ் 8 குறித்து மேலும் பல சுவாரஸ்யமான அம்சங்களும் தகவலும் பகிரப்பட்டன.


           வழக்கமான ஏ.எம்.டி. மற்றும் இன்டெல் மைக்ரோபிராசஸர்களுக்கு மட்டும் ஆதரவு வழங்குவதோடுநிறுத்தாமல் ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்களையும் ஆதரிக்கும் வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்ட் ரிஸ்க் மெஷின் (Advanced RISC Machine) என்றழைக்கப்படும் இந்த ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்கள் செல்பேசிகள், டிஜிட்டல் மீடியா மற்றும் மியூசிக் பிளேயர்கள், பி.டி.ஏ. சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குறிப்பிட்ட வகை ஏ.ஆர்.எம். பிராசஸர்களுக்கான விண்டோஸ் 8 இயங்குதளத்தில் பலர் ஆர்வம்காட்டியுள்ளனர். பில்ட் கருத்தரங்கில் நாங்கள் வெளிப்படுத்திய அனைத்து அம்சங்களும், ஏ.ஆர்.எம். கூட்டாளர்கள் மற்றும் கணினித் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய ஆ.ஆர்.எம் சார்ந்த விண்டோஸ் கணினிகளிலும் இயங்கும்.


         விண்டோஸ் 8 இயங்குதளத்தின் டெவலப்பர் முன்னோட்டத்தைப் பதிவிறக்க, http://dev.windows.com தளத்திற்குச் செல்லவும். இதில் சில மாதிரிப் பயன்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 நிறுவலில் இருந்து புதுப்பிக்க முடியாது என்பதையும், புத்தம் புதிய நிறுவல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும். இது பீட்டா வெளியீடு அல்ல என்பதையும், டெவலப்பருக்கான முன்னோட்டம் மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ளவும்.


          மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளம் டெவலப்பர்களுக்கும், அதைப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் ஒரு இனிய வரப் பிரசாதமாக அமையப் போகிறதுஎன்பதில் எந்த ஐயமும் இல்லை.

மேலும்...