புத்தக விமர்சனம்: மைக்ரோஸாப்ட் எக்சல்

 

 

     

 


     தரவுத் தொகுப்பு, கணக்குவழக்கு மற்றும் அலுவலகப்பணிக்கு எக்சல் ஸாப்ட்வேர் பெரிதும் பயன்படுகிறது. மைக்ரோசாப்ட் ஆபிஸின் தொகுப்பில் எக்சல் ஸாப்ட்வேர் மிவும் வலிமையானதாகும். இந்த எக்சல் ஸாப்ட்வேரை பாமரரும் அறியும் வண்ணம் பெரிகாம் பதிப்பகம் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.   

 

இந்நூலில் எக்சலின் வரலாறு, ஒர்க் ஷீட் - அடிப்படைத் தகவல்கள், ஒழுங்குபடுத்துதல், கணிதப் பயன்பாடுகள், அணிவகுப்புச் சமன்பாடு, தானியங்கி முழுமை, தானியங்கி திருத்தம், தானியங்கி நிரப்பி, தானியங்கி வடிவமைப்பு, தானியங்கி கூட்டல், எல்லைக் கோடுகள், கணக்கீட்டுப் பணியாளர்கள், வரைபடங்கள், பிடிப்புப் பலகை, பத்தி அகலம், நிபந்தனை வடிவமைப்பு, தகவல் ஒருங்கிணைப்பு ஆகியன விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

இவைத்தவிர்த்து சமன்பாடுகளை நகலெடுத்தல், விரும்பிய வடிவில் எண்கள், தகவல் வடிகட்டி, தகவல் படிவம், நிதி செயல்பாடுகள் , சுருக்கு வழிகள், மேக்ரோ, நுழைவு அனுமதிச் சொல், எழுத்துகளைச் சரி பார்த்தல், அச்சுப் படிவம், வரிசைகளை எக்சலுக்கு மாற்றுதல் ஆகிய கட்டளைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகட்டில் எக்சல் கோப்புகளின் பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் விலை. ரூபாய்.145 ஆகும். இப்புத்தகத்தினை திரு.சி.எஸ்.என்.ராஜா திறம்பட எழுதியுள்ளார்.

மேலும்...