மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஹோம் & ஸ்டூடன்ட் 2010

 

உங்கள் வீட்டு வேலை மற்றும் பள்ளி வேலைகளுக்கான திட்டங்களை திறம்பட உருவாக்கி, சிறப்பாகச் செயல்படுத்த உதவும் வகையில் பல முக்கிய கருவிகள் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஹோம் & ஸ்டூடன்ட் 2010 பதிப்பில் உள்ளன.

 

வேர்ட் மற்றும் பவர்பாயின்ட் பயன்பாடுகளில் உள்ள ஆயத்த டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பள்ளிப் பணிகளை சிறப்பான காட்சியமைப்புகளுடனும், மல்டிமீடியா அம்சங்களுடனும் புதுமையான முறையில் உருவாக்கிடலாம். எக்ஸல் 2010 -இல் உள்ள விரிதாள் கருவிகளின் மூலம் சாதாரண வீட்டு கணக்குகள் முதல் மாதாந்திர நிதிநிலை தயாரிப்புப் பணிகள் வரை சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.

 

 

மேலும் சில முக்கிய அம்சங்கள்:

 

  • ஒரு சில செயல்களிலேயே உங்கள் ஆவணங்களை சேமித்தல், பகிர்தல், அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் போன்ற மேம்பட்ட பயனர் அனுபவத்தின் மூலம் மேலதிக பயன்களைப் பெறலாம்.
  • உங்கள் உரைக்கு நிழலிடுதல், அதை ஒளிரச் செய்தல் போன்ற சிறப்பான காட்சியமைப்புகளை உருவாக்கலாம்.
  • வரைபடம் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகள் மூலம், உங்கள் வீட்டு நிதிநிலையை திட்டமிட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • மேம்பட்ட விரிதாள் கருவிகளின் மூலம் உங்களுக்குத் தேவையான தரவின் போக்கை எளிதில் கண்டறியலாம்.
  • மேம்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்யும் கருவிகள் மூலம், சிறப்பான விளக்கக்காட்சிகளை உருவாக்கி உங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கலாம்.
  • தேவைப்படும் உரை, படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ குறிப்புகளை எடுத்து எளிதில் தேடக்கூடிய நோட்புக்கில் சேமித்து, முழு செயல்திறனுடன் திட்டப்பணிகளை சிறப்புடன் நிர்வகிக்கலாம்.
  • ஆவணங்களை மிகச் சுலபமான வழியில் ஆன்லைனில் வெளியிட்டு அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம், பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.

 

கணினி தேவைகள்:

 

  • 500 மெகாஹெர்ட்ஸ் அல்லது அதிக திறனுள்ள பிராசஸர்
  • 256 MB RAM; கிராஃபிக்ஸ் அம்சங்கள், அவுட்லுக்கிற்கான உடனடித் தேடல் அம்சம் மற்றும் சில மேம்பட்ட செயல்பாடுகளுக்கு 512 MB
  • 3 GB வட்டு இடம்
  • 1024 x 576 அல்லது அதிக தெளிவுத்திறனுள்ள திரையகம் (மானிட்டர்)
  • விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா + SP1, விண்டோஸ் எக்ஸ்.பி. (கண்டிப்பாக SP3 இருக்க வேண்டும்) (32 பிட்), விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 R2, MSXML 6.0 உடன் (32 பிட் ஆஃபீஸ் மட்டும்), அல்லது அடுத்த 32 பிட்/62 பிட் இயங்குதளம்
  • கிராஃபிக்ஸ் வன்பொருள் பயன்பாடுகளுக்கு 64 MB அல்லது அதிகமான வீடியோ நினைவகத் திறன் கொண்ட DirectX 9.0c கிராஃபிக்ஸ் கார்டு
  • மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 அல்லது அடுத்த பதிப்பு, 32 பிட் உலாவி மட்டும்
  • இணைய செயல்பாடுகளுக்கு இணைய இணைப்பு தேவை

மற்ற கூடுதல் பயன்பாடுகளுக்கு ஏற்ப வன்பொருள் அல்லது மென்பொருள் தேவைகள் மாறுபடலாம். இந்தத் தயாரிப்பு 32 மற்றும் 64 பிட்களில் வெளியாகிறது. ஒரு உரிமத்தைப் பயன்படுத்தி இந்தத் தயாரிப்பை 3 கணினிகளில் நிறுவும் வாய்ப்பு உள்ளது.

மேலும்...