புத்தக விமர்சனம்
தகவல் தொழில்நுட்ப உலகில் இணையத்தையும், கணிப்பொறியையும் பிரிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பாமரரும் இணையத்தை தங்கள் செயல்பாட்டிற்காக பயன்படுத்தும் தேவை பெருகியுள்ளது. இணையத்தில் பெருகியுள்ள தமிழ் மொழியின் வளத்தை இணையமும், இனிய தமிழும் என்ற நூல் வாயிலாக படைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் ஆசிரியர் முனைவர் க.துரையரசன் இந்நூலை படைத்துள்ளார். இந்நூலில் அறிமுகமும் வரலாறும், இணைய வழித் தமிழ் கற்றலும், கற்பித்தலும், மின்நூலகம், ஒருங்குறியீட்டு முறை, இணைய இதழ்கள், வலைப்பூக்கள், தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்விசார் இணையதளங்கள், வேலைவாய்ப்பு இணையதளங்கள் ஆகிய அத்தியாயங்கள் ஆழமாக இத்தமிழ் நூலில் விளக்கப்பட்டுள்ளது. இசைப்பதிப்பகம் இந்த இணையமும் இனிய தமிழும் நூலை வெளியிட்டுள்ளது.