மந்தன் விருதைப் பெற்றது பாஷாஇந்தியா

 

       சிறந்த முறையில் கையாளப்படும் மின்வழி உள்ளடக்கம் மற்றும் படைப்புத்திறனை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்காக முதல் முறையாக "மந்தன் விருதுகள்" இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக மாநாட்டு விருதுகள், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உள்நாட்டு சமூக உறுப்பினர்கள், ஊடகங்கள், வளர்ந்து வரும் தெற்காசிய நாடுகளில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பிரபலப்படுத்தும் பிற அமைப்புகளுடன் இணைந்து டிஜிட்டல் எம்பவர்மெண்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இந்தியாவில் சிறந்த முறையில் வழங்கப்படும் மின் வழி உள்ளடக்கத்தை வரையறுக்கும் வளர்ச்சிக் களமாக இது விளங்கி வருகிறது. தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பத்தின் (Information Communication Technology - ICT) அசுர வளர்ச்சியும் அதன் ஈடிலா பயனும் உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டு ஏற்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கும் ஆளுமைக்கும் தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பம் ஒரு மிகச்சிறந்த கருவியாக பல்வேறு உரிமைதாரர்கள் கருதுகின்றனர்.

 

தங்கள் சமூகக் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்காக உலக நாடுகள் தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பப் பயன்பாட்டை பெருமளவு பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. வளர்ந்த, வளரும் நாடுகள் மற்றும் சமூகங்கள் தங்கள் செயல்பாடுகளின் பல்வேறு பிரிவுகளிடையே தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து வருகின்றன. வளர்ச்சி மற்றும் ஆளுமை தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் தகவல் தொடர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்களில் கணினி, இணையம், சமூக வானொலிச் சேவை, ஆடியோ- வீடியோ மற்றும் நவீன சாதனங்கள் உள்ளடங்கும்.

 

கல்வி, உடல்நலம், வாழ்வியல், வணிகம், ஆளுமை போன்று பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியை தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பம் பெற்றுள்ளது. அரசு, பெரு வணிக அமைப்புகள் மற்றும் தனியாரின் வேண்டுகோளுக்கிணங்க பொது மற்றும் தனியார் துறை திட்டங்களை ICT மூலம் பயன்படுத்தித் தொடங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

கேரளம், தமிழ்நாடு, உத்தராஞ்சல், டெல்லி போன்ற இந்திய மாநிலங்களில் தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பம் (ICT) மிகச் சிறப்பான பயனோக்குடனும், தரக் கண்ணோட்டத்துடனும் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இணையம், கணினி, சமூக வானொலிச் சேவை போன்ற பல்வேறு தகவல் தொடர்ப்பு தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் இதர ஊடங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் பெரும் பயனடைந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு.

 

ஈ-லோக்கலைசேஷன் என்றழைக்கப்படும் மின்-மொழியாக்கத்திற்கான முதல் பரிசை பாஷாஇந்தியா தட்டிச் சென்றுள்ளது என்று பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை இலங்கை அமைப்புகள் வென்றுள்ளன.

 

ஆன்லைன் உள்ளடக்கத்தை வழங்குவதோடு நிறுத்தாமல், அதையும் தாண்டி ஒரு சிறந்த சமூகத் தளமாகவும் பாஷாஇந்தியா இயங்குகிறது. கருத்தரங்குகள், வினாடி வினா போட்டிகள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தில் எங்கள் வல்லுநர் குழு முழுமையான பங்களிப்பை வழங்கி வருகிறது. கணினி மொழியில் குறித்த கேள்விகள்  மற்றும் சிக்கல்களுக்கான விவாதங்களை நடத்துவதில் மிகச் சிறந்த ஒரு தளமாக பாஷாஇந்தியா ஆன்லைன் விவாத மன்றம் விளங்குகிறது. இந்த விவாத மன்றத்தில் இந்திய மொழிக் கணினியியல் தொடர்பாக பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாஷாஇந்தியாவின் வல்லுநர் குழு ஆராய்ந்து பதிலளிக்கும். இந்திய மொழிக் கணினியியலை பிரபலப்படுத்தி, இத்துறையில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை பொது மக்களிடையே கொண்டு சேர்ப்பதே பாஷாஇந்தியாவின் முக்கிய குறிக்கோளாகும். இந்திய மொழிப் பயன்பாடுகள் மற்றும் எழுத்துருக்களை தங்கள் மொழி பேசும் மக்களிடையே இலவசமாக விளம்பரப்படுத்த சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு சிறந்த அரங்கமாக "சொல்யூஷன்ஸ் டைரக்டரி" இயங்கி வருகிறது.

 

தமிழ், அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம் போன்ற பிரதான இந்திய மொழிகளுக்கான மொழிக் கணினியில் பணிகளுக்காக பாஷாஇந்தியாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

IME என்றழைக்கப்படும் உள்ளிடும் முறை திருத்தி என்ற நிரலின் வளர்ச்சியே பிரதான மொழிக் கணினியியல் பணியாகக் கருதப்படுகிறது. ஆங்கில QWERTY விசைப்பலகையைப் பயன்படுத்தி இந்திய மொழி உரையை மிகச் சுலபமாக உள்ளிடும் வசதியை இந்த உள்ளிடும் முறை திருத்தி பயனர்களுக்கு வழங்குகிறது. பல்வேறு இயங்குதளங்களில் உள்ள ஆஃபீஸ் பயன்பாடுகள், வேர்ட்பேட் மற்றும் நோட்பேட் பயன்பாடுகளில் பயனர்கள் தங்கள் தாய்மொழி உரையை உள்ளிடலாம். திரைவழி உதவி, பன்மொழி விசைப்பலகை வடிவமைப்புகள் போன்ற அம்சங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட மொழி உள்ள ஆவணங்களைக் கையாளும்போது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனடியாக மாறும் வசதியும் இந்தக் கருவியில் உள்ளது.

மேலும்...