விண்டோஸ் 8 விற்பனைக்கு வரவுள்ள கணினிகள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எந்த புதிய மென்பொருள் வருகைக்கும் மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பு இருக்கும். மக்களும், ஐடி நிறுவனங்களும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பை போட்டிபோட்டு வாங்கி பயன்படுத்துவர். தற்போது அதே வரவேற்பு விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்போன் 7.0 மேங்கோ இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய உடன், விரைந்து விண்டோஸ் 8 இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
டேல் மற்றும் முன்னனி லேப்டாப்புகளுடன் விண்டோஸ் 8 ஒஎஸ் அளிக்கப்படவுள்ளது. மைக்ரோசாப்ட்டின் தலைமை அதிகாரி மைக்கேல், இணையதளத்தின் பேட்டி மூலம் தமது நிறுவனம் விண்டோஸ் 8 கொண்ட டேல் டேப்லட்டுகளை வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இப்புதிய விண்டோஸ் 8 இயங்குதளம் டேப்லட்டுகளை சிறப்பாக இயக்குவதோடு பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன விண்டோஸ் 8 மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் மற்றும் ஹார்வேர் அக்சலரேசன் போன்ற வசதிகளை மடிக்கணினிகளுக்கு வழங்குகிறது. விண்டோஸ் 8 இயங்குதளம் வரும் 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வருமென எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்டார்ட் பட்டன்களுக்குப் பதிலாக ஸ்டார்ட் திரையை வழங்கப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இவ்வசதி வராது. ஆனால் விரைவில் இவ்வசதியை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மெட்ரோ இன்டர்பேஸ் வசதி அப்ளிகேசன்களை பின்புல பணி செய்ய உதவியாக இருக்கும்.
டெல் மடிக்கணினி நிறுவனத்தை பொறுத்தவரை விண்டோஸ் 8, இந்நிறுவனத்தின் டேப்லட்டுகளிலும் வைத்தால் அது லாபமாக இருக்கும் என்று டெல் நம்புகிறது. இவற்றில் தமிழும், இந்தியமொழிகளும் வேலை செய்யும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.