இல்லத்திற்கான பொழுதுபோக்கு, கேமிங் சாதனம்
எக்ஸ் பாக்ஸ் 360 என்பது இல்லத்திற்கான ஒரு பொழுதுபோக்கு மற்றும் வீடியோ சாதனம் ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கைனெக்ட் எனப்படும் மோஷன் சென்ஸார் உள்ளீட்டுச் சாதனம் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், சமூக விளையாட்டு மற்றும் மொழுதுபோக்கில், எந்த ஒரு கட்டுப்படுத்தும் சாதனமும் தேவைப்படாததால், ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல்லங்களுக்கான பல சிறந்த, பரவலான கேம்களைக் கொண்டுள்ள எக்ஸ் பாக்ஸ் 360, இசையைக் கேட்டு மகிழவும், தரமான மற்றும் உயர் நுட்ப மூவிக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழவும், டிஜிட்டல் கேம்களை விளையாடவும் என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் இருந்து செய்து மகிழலாம். ஒட்டுமொத்த பொழுதுபோக்கு மையமாகத் திகழும் எக்ஸ் பாக்ஸ் 360, சுமார் 35 மில்லியன் எக்ஸ் பாக்ஸ் உறுப்பினர்களை ஒன்றாக ஒரே சமூக வலையமைப்பில் இணைத்து, இல்லம் அல்லது உலகத்தினருடன் ஈடு இணையில்லா உள்ளடக்க்கத்தைப் பகிர்ந்து கொண்டு எல்லையில்லா பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்குவதில் எவ்வித ஐயமுமில்லை என்றே கூறலாம்.
யூபிசஃப்ட்டின் டாம் கிளான்ஸி கேம்கள், எலக்டிரனிக் ஆர்டஸின் “மாஸ் எஃபெக்ட் 3”, “மேடன் என்.எஃப்.எல்”, “டைகர் உட்ஸ் பி.ஜி.ஏ. டூர்” மற்றும் “ஃபீஃபா” உள்ளிட்ட உலகின் முன்னணி கேம் வெளியீட்டாளர்கள் கைனெக்ட் ஆதரவை வழங்குகின்றனர். விரைவில் யு.எஃப்.சி.யும் எக்ஸ் பாக்ஸ் 360 க்கு வரவிருக்கிறது.
மிகச் சிறந்த கேம்களையும், மறக்க முடியா கேமிங் அனுபவத்தையும் தொடர்ந்து வழங்கிவரும் எக்ஸ் பாக்ஸ் 360 குறித்த கருத்தரங்கை மைக்ரோசாஃப்ட் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில், “கியர்ஸ் ஆஃப் வார் 3”, “ஃபோர்ஸா மோட்டார் ஸ்போர்ட் 4”, “ஹாலோ 4 (ட்ரெயிலர்)” போன்ற கேம்களைக் காட்சிப்படுத்தப்பட்டன. அதோடுமட்டுமல்லாமல், கைனெக்ட் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “ஃபேபிள்: த ஜர்னி” கேமின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட்.“மைன்கிராஃப்ட்” என்றழைக்கப்படும் தனித்து இயங்கும் பிசி கேம் விரைவில் எக்ஸ் பாக்ஸ் 360 இல் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தது.
கேமிங் துறையின் பல்வேறு படைப்பு நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் எக்ஸ் பாக்ஸ் ரசிகர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தைத் தொடர்ந்து கைனெக்டிலும் வழங்குவதில் முனைப்புடன் இயங்கி வருகின்றன.