மைக்ரோசாப்ட்டின் வைரஸ் செக்யூரிட்டி மென்பொருள்

 

                    நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ,  தரவிறக்கம் செய்யும் போதோ, டிவிடி, சிடிக்கள் மூலமாகவோ  அல்லது பெண் டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணிப்பொறியின் உட்சென்று ’ கணிப்பொறியிலுள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணிப்பொறியினை செயலிழக்க செய்திடும். கணிப்பொறியினை வைரஸிலிருந்து காப்பற்ற வைரஸ் தடுப்பு மென்பொருட்கள் பல உள்ளன. இதற்கென மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. 'Microsoft Security Essential' என்று புதிய மென்பொருள் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

 

 இம்மென்பொருள் அனைத்து கணிப்பொறிகளுக்கு அவசியம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி வைரஸ் தடுப்பு மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. மேலும் மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் நிறுவனமே இம்மென்பொருளை தயாரித்துள்ளதால் மக்களிடம் நன்மதிப்பு பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் இணையத்திலிருந்து இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான இணையம்: http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials

 

இம்மென்பொருளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

 

இது மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷனின் இலவச மென்பொருள் ஆகும்.


கணிப்பொறியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) இம்மென்பொருள் கொண்டுள்ளது.

 

பிற வைரசுகள் கணிப்பொறியை இயக்கும்போது அண்டாதபடி பார்த்துக்கொள்கிறது.

 

கணிப்பொறியிலுள்ள வைரஸ்கள். மெல்வெயார்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.

இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணிப்பொறியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.

 

இந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை உபயோகிக்க கணிப்பொறியின் அடிப்படை தேவைகளாக நமக்கு வேண்டியவற்றையும் இங்கு தொகுத்துள்ளோம். இம்மென்பொருள் தனிக்கணிப் பொறியிலும், நெட்வோர்க்கிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

கணிப்பொறிகளில் Windows XP(SP3), Vista, Windows 7  சான்றிதழ்  பெற்ற இயங்குதள மென்பொருளை உபயோகிக்க வேண்டியது அவசியமாகும். இம்மென்பொருளை பதிக்க 200MB கொள்ளளவு இடம் இருக்கவேண்டும்.

 

Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியமாகும். XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியமாகும். தனிமனிதன் முதல்ச சர்வதேச நிறுவனங்களுக்கு இம்மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.


 

மேலும்...