Skip Ribbon Commands
Skip to main content
    

 

 

 

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2010 இன்ஜினியரிங்

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2010 செயல்படுத்தல் கருவிகளின் தயார்நிலை

ஆஃபீஸ் 2010 செயல்படுத்தலை துரிதப்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பேருதவியாக இருக்கப்போகும் கருவிகள் (2 வாரங்களில் 4 கருவிகள்) கடந்த இரண்டு வாரங்களில் வெளியாகியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள அந்த நான்கு கருவிகளைப் பற்றிய சிறப்பம்சங்களை இந்தப் பதிவுகளில் பார்க்கலாம். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்றுக் கொள்வதற்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆஃபீஸ் 2010 செயல்படுத்தலுக்கான மதிப்பிடுதல் மற்றும் திட்டமிடுதல், ஆஃபீஸ் பயன்பாட்டு இணக்கத்தன்மையில் சாத்தியமுள்ள சிக்கல்களை மதிப்பிடுதல், உங்கள் ஆஃபீஸ் 2010 செயல்படுத்தலை விருப்பப்படி அமைத்தல் போன்றவற்றுக்கான உதவிகளை இந்தக் கருவிகள் முறையாக வழங்குகின்றன.

1. மைக்ரோசாஃப்ட் மதிப்பிடல் மற்றும் திட்டமிடல் கருவிப்பொதி 5.0 (MAP) - (Microsoft Assessment & Planning Toolkit 5.0 - MAP)

MAP என்பது, செயல்படுத்தல் முறைகளை தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் துவங்குவதற்கு உதவும் மதிப்பிடல் மற்றும் திட்டமிடல் கருவி ஆகும். உங்கள் கணினியின் தற்போதைய சூழலை ஆராய்ந்து கணக்கெடுத்து, அது புதிய தொழில்நுட்பத்திற்கு (ஆஃபீஸ் 2010-க்கு) இடம்பெயர்வதற்கான தயார்நிலையை இந்தக் கருவி மதிப்பிடும். MAP என்பது ஒரு முகவர் இல்லாத கருவியாகும், அதாவது இலக்குக் கணினிகளில் எந்த உபகரணங்களையும் நிறுவாமலே உங்கள் பிணையத்தில் உள்ள கணினிகளை கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றது. கணக்கெடுப்பு மற்றும் மதிப்பிடலை மேற்கொள்ள, உங்கள் தகவல் தொழில்நுட்பச் சூழலில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் தொழில்நுட்ப முறைகளையே MAP பயன்படுத்தும். விண்டோஸ் மேலாண்மை கருவியாக்கம் (Windows Management Instrumentation - WMI), தொலைநிலை பதிவகச் சேவை, ஆக்டிவ் டைரக்டரி டொமைன் சேவைகள், மற்றும் கணினி உலாவிச் சேவை போன்றவை இந்த தொழில்நுட்பங்களில் அடங்கும். MAP -இன் திறன்கள் அனைத்தையும் MAP வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

MAP 5.0 கருவிப்பொதியின் பீட்டா விநியோகத்தைப் பற்றி எற்கனவே பதிவு செய்திருந்தோம். மேம்பட்ட மதிப்பீட்டு ஏற்பாட்டையும் அறிக்கையையும் வழங்குவதற்கு ஏற்றவகையில் கருவியை மேம்படுத்துவதற்கு எங்களுக்குப் பெரிதும் உதவிய சமூகத்தின் கருத்துக்களுக்கு நன்றி. ஆஃபீஸ் 2010 தயார்நிலை அறிக்கைகளின் மாதிரி சுருக்கக் காட்சியை இங்கு காணலாம்: ஆஃபீஸ் 2010 சுருக்கவுரை ஏற்பாட்டின் மாதிரி,  ஆஃபீஸ் 2010 மதிப்பீட்டு அறிக்கை மாதிரி

 2. ஆஃபீஸ் சூழல் மதிப்பீட்டுக் கருவி - Office Environment Assessment Tool (OEAT)

ஆஃபீஸ் 97, ஆஃபீஸ் 2000, ஆஃபீஸ் XP, ஆஃபீஸ் 2003, 2007 ஆஃபீஸ் முறைமை மற்றும் ஆஃபீஸ் 2010 போன்றவற்றுடன் ஊடாடும் துணை நிரல்கள் மற்றும் பயன்பாடுகளை பயனகக் கணினிகளில் OEAT தேடிக் கண்டுபிடிக்கும். தங்களது ஆஃபீஸ் 2010 இடம்பெயர்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயன்பாட்டின் இணக்கத்தன்மையை மதிப்பீடு செய்யும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்துவதற்காக இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.  மைக்ரோசாஃப்டின் சார்பற்ற மென்பொருள் விற்பனையாளர்களின் பயன்பாட்டு இணக்கத்தன்மையை அறிந்துகொள்ளல் திட்டத்திற்கு சார்பற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் தங்களது துணை நிரல்களை சமர்ப்பிப்பதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள துணை நிரல்களை, ஏற்கனவே தேடிக் கண்டுபிடித்த துணை நிரல்கள் மற்றும் பயன்பாடுகளுடன் ஒப்பிட்டு அவற்றின் செயல்பாட்டு இணக்கத்தன்மையை இந்தக் கருவி ஆராயும் திறன் பெற்றது.  ஆஃபீஸ் சூழல் மதிப்பீட்டுக் கருவியானது விற்ப்பனையாளரின் பெயர், தயாரிப்பின் பெயர் மற்றும் பதிப்பின் பெயரை ஒப்பிட்டு, முழுமையான மற்றும் பகுதியளவு பொருத்தங்களை முடிவுகளாக அறிக்கையில் பட்டியலிடுகிறது. மேலும் விவரங்களுக்கு தொழில்நுட்ப நூலகத்தில் உள்ள, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் சூழல் மதிப்பீட்டுக் கருவி பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

3. ஆஃபீஸ் 2010 குறியீட்டு இணக்கத்தன்மை ஆய்வாளர் - (Office 2010 Code Compatibility Inspector -OCCI)

ஆஃபீஸ் 2010 குறியீட்டு இணக்கத்தன்மை ஆய்வாளர் எனும் கருவியானது, மைக்ரோசாஃப்ட் எக்சல் 2010, மைக்ரோசாஃப்ட் 2010 பவர்பாயிண்ட் 2010, மைக்ரோசாஃப்ட் வேர்டு 2010 மற்றும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டூடியோ 2008 ஆகிய பயன்பாடுகளில் சிக்கல் தீர்ப்பதற்கும், மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக் ஃபார் அப்ளிகேஷன் (VBA) மேக்ரோக்கள் மற்றும் துணை நிரல்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் நிரல் வடிவமைப்பாளர்களால் பயன்படுத்தப்படும் துணை நிரலாகும். ஆஃபீஸ் 2010 -க்கு இடம்பெயர்வதைத் துரிதப்படுத்துவதில் VBA குறியீட்டில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க நிரல் வடிவமைப்பாளருக்கு இந்தக் கருவி உதவுகிறது. முன்பே அறிந்த இணக்கத்தன்மை சிக்கல்கள் ஏதாவது உள்ளதா என ஒரு திட்டப்பணியில் உள்ள குறியீட்டைத் தேடிப்பார்த்து, ஆப்ஜக்ட் மாடலில் உள்ள குறியீட்டில் மாற்றப்பட்ட அல்லது அகற்றப்பட்ட உருப்படிகள் ஏதும் இருந்தால் அவற்றை உங்களுக்குத் தெரியப்படுத்தும். மேலும் விவரங்களுக்கு, தொழில்நுட்ப நூலகத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் குறியீட்டு இணக்கத்தன்மை ஆய்வாளர் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

 4. மைக்ரோசாஃப்ட் செயல்படுத்தல் கருவிப்பொதி 2010 புதுப்பித்தல் 1 - (Microsoft Deployment Toolkit 2010 Update 1)

ஆஃபீஸ் 2010 பொதிக்கான சிறந்த முறையையும் ஆஃபீஸ் தனிப்பயனாக்கல் கருவி (Office Customization Tool) மற்றும் ஆஃபீஸ் config.xml போன்ற அமைப்புகளைக் காண்பித்து எளிமையாகப் பயன்படுத்துவதற்கான வசதியை MDT 2010 வழங்குகிறது. ஆஃபீஸ் 2010 உள்ளிட்ட முழுமையான டெஸ்க்டாப் செயல்படுத்தல் பொதி ஒன்றை கட்டமைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். ஆஃபீஸ் 2010 -ஐ செயல்படுத்த MDT 2010 -ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் முழு எடுத்துக்காட்டையும் ஸ்பிரிங்போர்ட் தொடர் பதிவில் உள்ள வலைப்பதிவில் பார்க்கலாம். MDT 2010 புதுப்பித்தல் 1ஐ இப்பொழுதே பெற்று, முழுமையான செயல்படுத்தல் பொதியை MDT 2010 இன் மூலம் கட்டமைக்கத் தொடங்கவும். MDT 2010 புதுப்பித்தல் 1 பற்றிய முழு விளக்கத்தையும் பார்க்கவும்.                                                                                                                            

இந்தக் கருவிகள் செயல்படுவதைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால்,  உங்களுக்கு உதவ, நிறுவுதலுக்கான செயல்முறை ஆதாரப் பொதி ஒன்றை வைத்திருக்கிறோம். கட்டுப்பாடான ஒரு சூழலில் ஆஃபீஸ் 2010, விண்டோஸ் 7 எண்டர்பிரைஸ், இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் 8, மற்றும் அப்ளிகேஷன் விர்சுவலைசேஷன் (App-V) போன்றவற்றை டெஸ்க்டாப் செயல்படுத்தல் முறை மூலம் வழங்கப்படுவதை தெளிவுபடுத்துவதற்காக இந்த செயல்முறை ஆதாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட கருவிகளும், மற்றவை அனைத்தும், மைக்ரோசாஃப்ட் செயல்முறை ஆதாரத் துவக்கப் பொதியுடன் வழங்கப்படுகின்றன. முழுமையான டெஸ்க்டாப் செயல்படுத்தலின் விரைவான அனுபவத்தைப் பெற உதவுகிறது. ஸ்பிரிங்போர்ட் தளத்தில் உள்ள செயல்முறை ஆதாரப் பொதியை இங்கே அறிந்து கொள்ளவும்.

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint 2013.
©2014 Microsoft Corporation. All rights reserved.