அவுட்லுக் சோஷியல் கனெக்டர்
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2010 -இல் ஒரு முக்கிய அம்சமாக அவுட்லுக் சோஷியல் கனெக்டர் எனும் துணைப் பயன்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அமசத்தின் மூலம், நமது மின்னஞசல் தேவைகளுக்காக மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் பயன்பாட்டைப் பயன்படுத்தும் அதே நேரத்தில், சமூகப் பிணையத் தளங்களில் நமது நண்பர்களின் மிகச் சமீபச் செயல்பாடுகள் மற்றும் புதுப்பித்தல்களை மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் பயன்பாட்டுச் சாளரத்திலேயே காணலாம்.
மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் 2010 மின்னஞ்சல் உரையாடலில், உள்ள ஒரு தொடர்பைக் கிளிக் செய்தால் போதும், சமீபத்தில் அவர் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள், மின்னஞ்சல் இணைப்புகள், அவருடன் நீங்கள் சமீபத்தில் பங்கேற்ற சந்திப்புகள், ஃபேஸ்புக், லிஙக்ட் இன், மைஸ்பேஸ், விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ் போன்ற சமூகப் பிணையங்களில் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் போன்ற அனைத்து விவரங்களையும் சாளரத்தின் ஒரே பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
பின்வரும் முக்கிய தகவல்களை அவுட்லுக் சோஷியல் கனெக்டர் வழங்குகிறது:
வரலாறு: அவுட்லுக் முகவரிப் புத்தகத்தில் ஒருவருடன் நீங்கள் எப்போது கடைசியாக தொடர்பு கொண்டீர்கள் என மறந்து விட்டதா? அவுட்லுக் சோஷியல் கனெக்டர் உங்கள் அஞ்சல் பெட்டியை தானாகவே தேடி, அந்தத் தொடர்புடன் மிகச் சமீபத்தில் நீங்கள் தொடர்பு கொண்ட விவரங்களை துரிதமாகக் கொண்டு வரும்.
சந்திப்புகள்: முகவரிப் புத்தகத்தில் உள்ள ஒரு தொடர்புடன் அடுத்த சந்திப்பு எங்கு, எப்போது போன்ற விவரங்கள் ஒரு கிளிக்கில் தெரிந்து கொள்ளலாம்.
செயல்பாடுகள்: உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் சமூகப் பிணையத் தளத்தில் என்ன செய்கிறர்கள் என்று சமூகப் பிணையத் தளங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் சென்று பார்க்க வேண்டாம். ஃபேஸ்புக், லிங்க்ட் இன், மைஸ்பேஸ், விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ் போன்ற சமூகப் பிணையத் தளங்கள் இந்த அவுட்லுக் சோஷியல் கனெக்டருடன் இணைந்து செயல்படுவதால், ஒரே சாளரத்தில் உங்கள் நண்பர்களின் மிகச் சமீபச் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம்.