சோஷியல் நெட்வொக்கிங் : ட்விட்டர்


     டுவிட்டர் என்பது மைக்ரோ பிளாக்கிங் பிரிவில் முன்னணியில் இருக்கும் சமூகக் கூட்டிணைப்பு (சோஷியல் நெட்வொக்கிங்) வலைத்தளம் ஆகும். டுவீட் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் தங்களுக்கிடையே அனுப்பும், பெறும் வசதி இதில் உண்டு. செய்திகளை அதிகபட்சமாக 140 கேரக்டர்களுக்குள் மிகச் சுருக்கமாக உள்ளடக்குவதே இந்தச் சேவையின் சிறப்பம்சம் ஆகும்.


எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தனக்கென ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்கி ட்வீட் செய்யத் தொடங்கலாம். எந்தவித நிபந்தனையுமின்றி மற்ற பயனர்களைப் பின்தொடரும் திறந்த முறை சமூகத் தளமாக இது விளங்குகிறது. இருப்பினும், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், தங்கள் ட்வீட்டுகளைப் பாதுகாக்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயனர்களின் ட்வீட்டுகளைப் பாதுகாப்பதால், தன்னைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அந்த ட்விட்டர் கணக்கின் உரிமையாளர் ஒப்புதல் வழங்க வேண்டும். குறிப்பட்ட ஒரு பயனர் தனது ட்வீட்டுகளை பார்க்க வேண்டாம் என்று நினைத்தால், அவர்களைத் தடை செய்யும் உரிமையும் அந்த கணக்கின் உரிமையாளருக்கு உண்டு.


அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே எண்ணிலடங்கா பயனர்கள் இந்தச் சேவையில் பதிவு செய்து புதிய கணக்கை உருவாக்கினர். மற்றொரு பயனரின் ட்வீட் தனக்குப் பிடித்திருந்து அதை மற்றவர்களுக்கும் பகிர விரும்பினால், ரீட்வீட் செய்யும் வசதியும் இச்சேவையில் உள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற பயனர்களின் ட்வீட் செய்தவுடன், அந்த ட்வீட்டுகளை பயனர்கள் உடனடியாக தங்கள் செல்பேசியில் ஒரு குறுஞ்செய்தியாகப் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


ட்விட்டர் ஒரு சிறப்பானதொரு வணிகப் பயன்பாடாக இல்லை என்று ஆரம்பகாலகட்டங்களில் பெறும் விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னாளில் பிங் (Bing) மற்றும் கூகுள் (Google) போன்ற தேடுபொறிகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் காரணத்தால், நல்ல வருவாயை ஈட்டத் தொடங்கியுள்ளது ட்விட்டர். தனது சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் புதிய ட்விட்டர் வடிவமைப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர்.


மேலும் விவரங்களுக்கு www.twitter.com தளத்திற்குச் செல்லவும்.

மேலும்...