மைக்ரோசாஃப்ட் தொடு சுட்டி

 

            விண்டோஸ் 7 பயனர்களுக்கு பல சிறப்பம்சங்கள் கொண்ட தொட்டு உலவும் வசதியை மைக்ரோசாஃப்ட் தொடு சுட்டி வழங்குகிறது. விண்டோஸ் 7 பயனர்கள் தங்கள் கணினியில் நவீனமான முறையில் செயலாற்றுவதற்கு இந்த அற்புதமான சுட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மைக்ரோசாஃப்ட் தொடு சுட்டியின் மூலம் பாரம்பரிய வழியிலும் சுட்டியைப் பயன்படுத்தலாம். 

 

            இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஆய்வுக் குழுவினரும், மைக்ரோசாஃப்ட்டின் கேம்ப்ரிட்ஜ் அண்டு தி அப்ளைட் சயின்சஸ் குரூப் அணியினரும் இணைந்து 2008 ஆம், ஆண்டு முதல் இந்தத் திட்டப்பணியில் ஈடுபட்டு தங்கள் இலக்கை அடைந்துள்ளனர்.

 

           பொத்தான்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் முழுக்க முழுக்க தொடு உணர்வின் மூலம் உங்கள் கணினியுடன் முழுமையாகவும் துல்லியமாகவும் செயலாற்றும் திறன் கொண்ட சுட்டியை முதல் முறையாக மைக்ரோசாஃப்ட்  வழங்குகிறது. இந்தப் புதிய தொடு சுட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியை ஒட்டுமொத்தமாக விரல் நுணியில் கட்டுப்படுத்தி, உங்கள் வேலைகளை மிகச் சுலபமாகவும், துரிதமாகவும் முடிக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது மைக்ரோசாஃப்ட்.

 

          சாதாரண சுட்டிகளின் மூலம் ஒரு பொருளைச் சுட்டி, கிளிக் செய்வது போன்றே, அனைத்து பணிகளையும் இந்தத் தொடு சுட்டியின் மூலம் செய்து முடிக்கலாம். அதுமட்டுமின்றி தங்களின் விரல் சொடுக்கின் மூலம் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மிகச் சுலபமாக உலவும் அம்சத்தை இந்த தொடு சுட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

           சாளரங்களைச் சிறிதாக்குவது, பெரிதாக்குவது, வலைப்பக்கங்களில் ஸ்க்ரோல் செய்வது, போன்று நாம் அடிக்கடி செய்யும் பணிகள் யாவும் சுட்டியின் மேல் பகுதியில் நாம் விரல் நுணியில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தொடு சுட்டியின் மூலம் பல வழிகளில் பயனர்கள் உலவலாம்:


• ஒரே விரலைப் பயன்படுத்தி தங்களின் ஆவணம் முழுவதும் மிகச் சுலபமாக ஸ்க்ரோல் செய்யலாம்.
• இரண்டு வரல்களைப் பயன்படுத்தி, தாங்கள் பணியாற்றும் சாளரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் – சாளரத்தைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல், அல்லது சாளரங்களை இடமிருந்து வலமாக மாற்றுவது போன்ற செயல்பாடுகள்.
• மூன்று விரல்களைப் பயன்படுத்தி ஒட்டு மொத்த டெஸ்க்டாப்பையும் கட்டுப்படுத்தலாம் – பணிகளுக்கிடையே மாறுதல், அல்லது திறந்துள்ள அனைத்து சாளரஙளையும் மூடுதல் போன்ற செயல்கள்.
• கட்டைவிரல் சொடுக்கின் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பவர்பாயின்ட் மற்றும் விண்டோஸ் ஃபோட்டோ வியூவர் போன்ற பயன்பாடுகளுக்கிடையே மிகச் சுலபமாக மாறிக் கொள்ளலாம்.
சிறிய கையடக்கக் கருவிகளில் இன்று தொட்டு உணரும் அம்சம் மிக நவீன தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ள சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொடு சுட்டியானது பல அம்சங்களை தன்னகத்தே புதைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

மேலும்...