விண்டோஸ் மொபைலுக்கான பயன்பாடுகள்
உங்கள் விண்டோஸ் போனுக்கான பயன்பாடுகள் வேண்டுமா? கவலை வேண்டாம்!
விண்டோஸ் மொபைலுக்காக, மைக்ரோசாஃப்ட் மற்றும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் தயாரித்த பயன்பாடுகளை எளிதில் தேடி உங்கள் விண்டோஸ் ஃபோனில் நிறுவ உதவும் சேவையே மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ் ஃபார் மொபைல் (Windows Marketplace for Mobile).
உங்கள் ரசனைக்கேற்ற விளையாட்டுக்கள், உங்கள் வேலையை மிக விரைவாக முடிக்க உதவும் மென்பொருள் பயன்பாடுகள், உலக வரைபடங்கள் மற்றும் தேடலை உள்ளடக்கிய பயண வழிகாட்டிகள், உங்களுக்குப் பிடித்த இசை மற்றும் வீடியோக்களை பதிவிறக்க உதவும் பயன்பாடுகள், தகவல் தொடர்புக்கென பிரத்யேகமாக உதவும் பயன்பாடுகள் போன்றவற்றை Windows Marketplace for Mobile சேவையின் மூலம் நீங்கள் பெறலாம்.
அதுமட்டுமின்றி, பீபோ, ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டிணைப்பு பயன்பாடுகள், உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை உடனுக்குடன் உங்கள் விண்டோஸ் ஃபோனில் நொடிப்பொழுதில் பெற உதவும் பயன்பாடுகள், பன்மொழி அகராதிகள் மற்றும் பொன்மொழிகளை உள்ளடக்கிய பயன்பாடுகள் போன்றவையும் Windows Marketplace for Mobile சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன.
விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்தி, வானிலை, தகவல் தொடர்பு என்று 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விண்டோஸ் ஃபோனுக்காக பிரத்யேகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தாலும், சில மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை உங்கள் விண்டோஸ் ஃபோனில் நிறுவி பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் விண்டோஸ் ஃபோன் 6.5 பயன்படுத்துபவராக இருந்தால் Windows Marketplace for Mobile சேவையை அணுக உங்கள் ஃபோனின் "Start" மெனுவிற்குச் செல்லவும்.
விண்டோஸ் ஃபோன் 6.0 அல்லது 6.1 பயன்படுத்துவோர் Windows Marketplace for Mobile சேவையைப் பெற, உங்கள் ஃபோன் உலாவியில் http://mp.windowsphone.com தளத்திற்குச் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம்.