விண்டோஸ் 7.0 இயங்குதளத்துடன் புதிய ஸ்மார்ட்போன்


              செல்பேசிகள் பயன்படுத்தாதவரே இல்லை என்று கூறக்குடிய சூழல் பரவியுள்ளது. அநேகர் இரண்டு செல்பேசிகள் வ்ரை பயன்படுத்த துவங்கியுள்ளனர். செல்பேசிகள் வகைகளும், மாடல்களும் எண்ணெற்ற சிறப்பம்சத்துடன், நவீன ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் குவிந்து கொண்டிருக்கையில், தனக்கென்று தனி முத்திரை பதிக்கும் சோனி நிறுவனம், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை ஈர்க்க எக்ஸ்பீரியா எக்ஸ்7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் அளவுடன், டபிள்யூவிஜிஏ டச் ஸ்கிரீன் தொழில் நுட்ப வசதி கொண்டது. எக்ஸ்பீரியா எக்ஸ்-7 மொபைல் விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கும். இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தை எளிதாக இயங்க வைக்க 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8260 சிபியு பிராசஸர் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்சல் கேமிராவும் உள்ளதால், 720பி துல்லியத்தில் வீடியோ பதிவு வசதியினை பெற முடியும்


இந்த ஸ்மார்ட்போனில் சோஷியல் நெட்வொர்க் இணைய வசதியையும் பயன்படுத்தலாம். மேலும் ஸ்டீரியோ புளூடூத் வசதியினை உபயோகித்து தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம். விண்டோஸ் 7 ஆபரேடிங் சிஸ்டம் அளிக்கப்பட்டுள்ளதால் கணிப்பொறியின் அனைத்து சாப்ட்வேர்களும் இயங்குகிறது. பல இந்திய மொழிகளிலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். சிறியோர் முதல் அனைவருக்கும் எளிமையாக இச்செல்பேசி பயன்படுகிறது. புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்-7 ஸ்மார்ட்மொபைல் வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்கும் என்று எதிர் பார்ப்பு உள்ளது.


 

மேலும்...