உலகமயமாக்கல் - படிப்படியான முறையில்
சர்வதேசமயமாக்கலைப் புரிந்துகொள்ளுதல்


சர்வதேசமயமாக்கப்பட்ட தயாரிப்புகளை வடிவமைப்பது என்பது ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட தொடர்ச் செயல்பாடாகும். ஒரு தயாரிப்பை உலகமெங்கும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு தயாரிப்பாகவோ, பல்வேறு சந்தைகளில் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கும் ஒற்றைப் பைனரிப் பயன்பாடாகவோ உருவாக்குவதற்கு, அல்லது ஒரு தயாரிப்பை மிகச்சிறந்த தரம் கொண்டதாக, அதன் வெளிநாட்டு-மொழிப் பதிப்புகளில் உருவாக்குவதற்கு தேவையான முயற்சியின் அளவையும் அதற்கு செலுத்த வேண்டிய கவனத்தையும் அதன் வடிவமைப்பாளர்களும் அவர்களின் மேலாளர்களும் ஒட்டுமொத்தமாகவே குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள். நீங்கள் ஒரு வடிவமைப்பாளர் என்றால், உங்கள் நிர்வாகம் இதற்கு தேவையான அனைத்தையும் புரிந்து கொண்டதா என்பதை உறுதி செய்யுங்கள். வரக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் முன்கூட்டியே அறிந்திருந்தால், அது உங்கள் தயாரிப்பு சுழற்சியின் போது நேரத்தைச் சேமிக்கவும் பணம் விரயமாவதைத் தடுக்கவும் ஏற்ற தீர்மானங்களை எடுக்க உதவியாக இருக்கும்.


சர்வதேசமயமாக்கப்பட்ட மென்பொருளை உருவாக்கும் செயல்முறையில் இரண்டு விதமான நிலைகள் உண்டு (கீழே உள்ள படம்):


• உலகப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குதல். இந்த நிலையானது பொதுவான குறியாக்கம் (Coding) மற்றும் வடிவமைப்புச் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. இதில் உலகமயமாக்கல் மற்றும் மொழியாக்கல் நிலை போன்ற இரண்டு பெரும் பகுதிகள் அடங்கும்.

• மொழியாக்கம். இந்த நிலையில் தான் ஒரு குறிப்பிட்ட சந்தைக்கு ஏற்ப ஒரு தயாரிப்பை தன்மயப்படுத்தி அதனை மொழிபெயர்க்கும் செயல்பாடு நடைபெறும். உதாரணமாக, மைக்ரோசாஃப்டின் Win32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் (Application programming interface - API) மூலம் வழங்கப்படும் தேசிய மொழி உதவிமையத்தைப் (NLS)  பயன்படுத்துவது என்பது உலகப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குதல் செயல்பாடாகும். அதே நேரம் பயனர் இடைமுகப்புக் கூறுகளில் (UI)  திருத்தம் செய்தல், உரையை மொழிபெயர்த்தல், சொல்பயன்பாட்டைத் தரநிலைப்படுத்துதல் போன்றவை மொழியாக்கச் செயல்பாடுகளாகும். குறியமைத்தல் (Coding) போன்றவற்றில் வடிவமைப்பாளர்கள் கவனம் செலுத்துவதால் அவர்கள் உலகப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக்கும் நிலையில் உள்ள சிக்கல்களில் முதல்நிலையாக கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஒரு தயாரிப்பு மொழிபெயர்க்கப்படும் முறையும் அது அந்த மொழிக்கேற்ப தன்மயமாக்கப்படும் முறையும், குறியீடுகளிலும் வடிவமைப்பின் அம்சத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதால, அதன் அடிப்படை மொழியாக்கக் கூறுகளை வடிவமைப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

                           

சொல்விளக்கம்
உலகமயமாக்கல்:

ஒரு நிரலின் மொத்த அமைப்பை வடிவமைப்பதற்கான செயல்முறையில், அதன் பயன்பாட்டு அம்சங்களும் குறியாக்க வடிவமைப்பும் தனிப்பட்ட ஒரு மொழி அல்லது ஒரு பகுதிக்கு என மட்டும் அமைக்கப்படுவதல்ல. மாறாக, குறிப்பிட்ட பகுதிகளுக்கு என தொடர்புபடுத்தப்பட்ட, குழுவாக அமைக்கப்பட்ட, யூனிகோடு-ஆதரவு கொண்ட மொழிகளின் ஸ்கிரிப்டுகள் மற்றும் தரவுகளுக்கான உள்ளீடு, தோற்றம் மற்றும் வெளியீடு போன்றவற்றுக்கு ஏற்ப அவற்றின் வடிவம் அமைக்கப்பட வேண்டும்.


மொழியாக்க நிலைக்கு ஏற்றதாக்குதல்


மூலக் குறியீட்டுக்கு மாற்றங்களே செய்யாமல் பல்வேறு மொழிப் பதிப்புகளாக ஒரு நிரலை மொழியாக்கம் செய்யப்படும்படி மென்பொருள் குறியீட்டின் அடிப்படை மற்றும் ஆதாரங்களின் வடிவமைப்பை அமைத்தல்.