மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ்  2010

 

 

மைக்ரோசாஃப்ட் ஹோம் & ஸ்டூடன்ட் 2010

 (Microsoft Office Home and Student 2010)

 

மைக்ரோசாஃப்ட் 2010 தவிர்த்து இதன் பல்வகை புரோகிராம் குறித்து இக்கட்டுரையில் காண்போம். இத்தொகுப்பினைப் பெறும் ஒருவர், தன் இல்லத்தில் மூன்று பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இதனை நிறுவிக் கொள்ளலாம். வேர்ட், பவர்பாயின்ட், எக்சல், ஒன்நோட் என நான்கு அடிப்படை அப்ளிகேஷன்கள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வணிக நிறுவனத்திலும், லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.

 

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் ஹோம் & பிசினஸ் 2010

(Microsoft Office Home and Business 2010)

 

இது சிறிய அளவி்ல் வணிகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் வேர்டு, எக்சல், பவர்பாயிண்ட், ஒன்நோட்  தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

Microsoft Office Professional Academic 2010

 

இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher and Access) உள்ளன. ---@_.edu என்ற இமெயில் முகவரியைக் கொண்டுள்ள எவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தாட்சி பெறாத கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.

 

வணிகப் பதிப்புகள் (Business Edition)

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் ஸ்டான்டர்டு 2010 (Microsoft Office Standard 2010)

இந்தத் தொகுப்பில், அடிப்படையான நான்கு புரோகிராம்களுடன், அவுட்லுக் மற்றும் பப்ளிஷர் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த வால்யூம் லைசன்ஸ் முறையில் இது விற்பனை செய்யப்படும்.

 

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் புரஃஷனல் 2010

Microsoft Office Professional 2010

சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் இணைக்கப்பட்டுள்ளன.

 

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் புரஃஷனல் பிளஸ் 2010

Microsoft Office Professional Plus 2010

அடிப்படைத் தொகுப்புகளுடன் அவுட்லுக் (Outlook), பப்ளிஷர் (Publisher), ஆக்சஸ் (Access) Sharepoint Workspace (foemerly Groove), Communicate, and Infopath ஆகியவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் முறையில் வாங்கலாம்.

ஆபிஸ் 2010ஐ இயக்க உங்கள் கணினி எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பி்ன் வந்த இணைப்புடன் (32 அல்லது 64 பிட், விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008. ஹார்டு டிஸ்க்கில் குறைந்தது 3 ஜிபி இதற்கென இருக்க வேண்டும். வழக்கம்போல, ஒரு ஆஃபிஸ் 2010 தொகுப்பு, ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பதிந்து இயக்க உரிமம் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.