விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ்


இயங்கு தளங்கள், உற்பத்திக்குப் பயன்படும் தொகுப்புகள், பயன்பாடுகள் என்று மைக்ரோசாஃப்ட்டின் பல மென்பொருள் தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கான ஆன்லைன் வர்த்தக இடமே விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ். இதை அணுக விண்டோஸ் லைவ் அடையாளச் சான்றுகள் தேவைப்படும்.


ஒன்றுக்கு மேற்பட்ட வணிகர்கள் மற்றும் தயாரிப்பு விவரப்பட்டியலைக் காண அனுமதிக்கும் டிஜிட்டல் லாக்கர் வசதியை விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ் வழங்குகிறது. வாங்கிய மென்பொருளை பாதுகாப்பான டிஜிட்டல் லாக்கர் அசிஸ்டென்ட் வழியாக பதிவிறக்கம் செய்ய இந்த டிஜிட்டல் லாக்கர் அம்சம் உதவும். இந்த வசதி யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.


விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ் சேவையை விலக்கிக்கொள்வதாகவும், அதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் சேவையை மக்கள் அணுக வேண்டும் என்றும் 2008 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு துவக்கத்தில் விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ் ஃபார் மொமைல் சேவை துவக்கப்பட்டது, பின்னாளில் இது விண்டோஸ் ஃபோன் 7 மார்க்கெட்பிளேஸ் என்று புதிய மாற்றங்களுடன் வெளியானது.


விண்டோஸ் மார்க்கெட்பிளேஸ் சேவை தற்போது மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. விண்டோஸ், ஆஃபீஸ் உற்பத்தித் தொகுப்பு, வடிவமைப்புக் கருவிகள், டெவலப்பர் கருவிகள், புத்தகங்கள், நெட்புக்ஸ், மடிக்கணினிகள் (லேப்டாப்), விண்டோஸ் ஃபோன்கள், கேம்ஸ், உபகரணங்கள் என பல்வேறு வகையான பிரிவுகளில் தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன.


விண்டோஸ்மார்க்கெட்பிளேஸில் நீங்கள் ஷாப்பிங் செய்வது மிகச் சுலபமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய தயாரிப்புகள் முகப்புப் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் வாங்கும் பொருளின் நம்பகத்தன்மையை நன்கு உறுதிசெய்த பின்னர் அந்த மென்பொருள் அல்லது வன்பொருளை ஒரு சில செயல்களிலேயே நீங்கள் வாங்கிவிடலாம். ஆன்லைனில் வாங்கிய தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப அவர்களிடம் பெறப்படும் ஷிப்பிங் கட்டணம் மிகக் குறைவாக இருக்குமாறு நாடுகளுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.windowsmarketplace.com தளத்திற்குச் செல்லவும்.

மேலும்...