விண்டோஸ் மீடியா
விண்டோஸ் வடிவமைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மீடியா ஸ்ட்ரீமிங் செய்யப் பயன்படும் வலைத்தளமே Windowsmedia.com ஆகும். இசை, வீடியோக்கள், மூவிக்கள், டி.வி., கேம்ஸ், இன்டர்நெட் ரேடியோ போன்ற பல வகையான மீடியா வடிவமைப்புகளை ஸ்ட்ரீமிங் செய்யலாம். விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா என்கோடர் மற்றும் இதர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த ஆதரவை இந்த தளத்தில் பெறலாம்.
தங்களுக்குப் பிடித்த இசை, ஆல்பம், இசைக் கலைஞர், இசையமைப்பாளர் என்று பலவகையான தேடல் வாய்ப்புகள் இசைப் பிரியர்களுக்கு உண்டு. இசைத் துறையில் மிகச் சமீபத்திய, மிகச் சிறந்த இசையை சிறப்பித்துக் காட்டும் வகையில், மாதத்தின் சிறந்த இசைக் கலைஞர் (Artist of the Month) மற்றும் வளரும் இசைக் கலைஞர் (Artist on the Rise) போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. உங்கள் ரசனைக்கேற்ப உங்களுக்குப் பிடித்த நாட்டின் நடன மற்றும் பாப் இசையையும் கேட்டு ரசிக்கலாம். வார இறுதிநாட்களை சிறப்புடன் கொண்டாட ஹிப் ஹாப், ராக் போன்ற பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வையும் சிறப்புடன் கொண்டாடும் வகையில் எளிமையாகவும், விரைவாகவும் மீடியாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் அம்சம் உள்ளது. மேலே குறிப்பிட்ட அம்சங்களைவிட இசையை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதே சிறப்பான செய்தியாகும்.
பாக்ஸ் ஆஃபீஸ் சூப்பர் ஹிட் திரைப்படம், தயாரிப்பில் உள்ள திரைப்படங்கள், சமீபத்தில் வெளியான டி.வி.டி.க்கள் போன்ற விவரங்களை திரைப்படங்களில் நாட்டம் உள்ளவர்கள் சுலபமாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சித் தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நேரம் மற்றும் விவரம் குறித்து தொலைக்காட்சிப் பிரியர்கள் அறிந்து கொள்வதற்காக டி.வி. என்ற தனிப்பிரிவு வழங்கப்பட்டுள்ளது.
கேம்ஸ், ஆங்கிலம் தவிர பிற மொழியில் பேசுபவர்கள் மற்றும் இன்டர்நெட் ரேடியோ பிரியர்களுக்காக தனித்தனியே பிரிவுகள் வழங்கப்பட்டு, அவர்கள் விருப்பத்திற்கேற்ற கேம்ஸ் மற்றும் சேனல்களுக்குச் சென்று மீடியாவை கண்டு, கேட்டு, பார்த்து ரசிக்கலாம்.